ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி.. இனி அதிக லக்கேஜ் கொண்டுசெல்ல முடியாது!

Railway Luggage Price in Tamil

Railway Luggage Price in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் ட்ரைன்ல அதிகம் லக்கேஜ் எடுத்து செல்லும் நபரா நீங்கள்.. அப்படி என்றால் உங்களுக்கான பதிவுதான் இது.. தற்பொழுது வெளியான செய்தி படி ரயில்வே துறை ரயிலில் அதிகமாக லக்கேஜ் கொண்டு செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே ரயில் பயணம் செல்லும் பொது எவ்வளவு லக்கேஜ் எடுத்து செல்லலாம் என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். சரி வாங்க ரயில்வே துறை அறிவித்துள்ள தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம்.

ரயில் லக்கேஜ் விலை நிலவரம்:

Railway Luggage

ட்ரைனில் தினமும் லட்சக்கணக்கான மக்கள்பயணம் செய்கின்றன. மற்ற போக்குவரத்துகளை விட ரயில் செல்வதையே நிறையப் பேர் விரும்புகின்றனர். இதற்கு காரணம்  இதில் நிறைய அம்சங்களும் சலுகைகளும் உள்ளன. டிக்கெட் கட்டணமும் குறைவு என்பதனால்.

இந்நிலையில் பல ஆண்டுகளாக ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் இஷ்டத்திற்கு ஏற்றவாறு நிறைய லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு ரயில் பயணத்தை மேற்கொள்கின்றன. இவற்றை தடுப்பதற்காகவே தற்போது பயணிகள் லக்கேஜ் கொண்டு செல்வதற்கு புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Railway Luggage Price in Tamil:

ரயில் பயணத்தில் உங்கள் லக்கேஜிகளை எடுத்து செல்ல கட்டணம்
வகுப்பு எடை கட்டணம் தொகை
ஏசி முதல் வகுப்பு 70 கிலோ எடை வரை அனுமதி அறிவித்த எடைக்கு மேல் உங்கள் உடமைகளை எடுத்து சென்றால் கட்டணம் தொகை செலுத்த வேண்டும்
ஏசி இரண்டாம் வகுப்பு 60 கிலோ வரை அனுமதி
ஏசி மூன்றாம் வகுப்பு ஸ்லீப்பர், ஏசி சேர் கார் மற்றும் ஸ்லீப்பர் 40 கிலோ வரை அனுமதி
ஜெர்னல் இரண்டாம் வகுப்பு குறைந்தபட்சம் 25 கிலோ வரை அனுமதி ரூ.30

முக்கிய குறிப்பு:

  • ரயில் பயணத்தின் போது நீங்கள் எந்த உடமைகளை எடுத்து செல்வதாக இருந்தாலும் 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்ய வேண்டும்.
  • முன்பதிவு செய்யாத உடமைகள் அனுமதிக்கப்படாது.
  • பேக்கிங் சரியாக செய்யப்படவில்லை என்றாலும் அந்த உடமைகளை அனுமதி வழங்கப்படாது.
  • பதிவு செய்த அளவுக்கு மேல் உடமைகளை எடுத்து சென்றால் 1.5 மடங்கு அபராதம் வழங்கப்படும்.
  • அதேபோல் யாரவது பதிவு செய்யாமல் அவர்களது உடமைகளை எடுத்து சென்றால் அதற்கு 6 மடங்கு அபராதம் வழங்கப்படும்.

எதற்க்காக இந்த புதிய விதி?

ரயிலில் பயணம் செல்லும் போது அவற்றில் பயணம் செல்பவர்கள் அவர்களுடன் நிறைய லக்கேஜ்களை கொண்டு செல்கின்றனர். அதாவது துணி, உணவு உள்ளிட்ட பல வகையான பொருட்களை பேக் மூலமாகவும், மூட்டைகளாகவும் எடுத்துச் செல்கின்றனர். சிலர் ஒரு ரயில் பெட்டியையே அடைக்கும் அளவுக்குக் கூட எடுத்துச் செல்வார்கள். இது மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக இருக்கும். இதன் காரணமாக தான் ரயில்வே துறை இந்த புதிய அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

ரயில்வே அமைச்சகம் மே 29ஆம் தேதியன்று இதுகுறித்து தனது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ரயில் பயணத்தின் போது அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டாம் என்றும் அதிகமான லக்கேஜ் இருந்தால் பயணத்தின்போது அசௌகரியம் அதிகமாக ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஒருவேளை அதிக லக்கேஜ் எடுத்து செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டால் பார்சல் அலுவலகத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

லக்கேஜ் விதிமுறைகள்:

ரயிலில் உள்ள பெட்டிகளுக்கு ஏற்ப லக்கேஜின் எடை அளவு மாறுபடும். அதிகபட்சமாக 40 முதல் 70 கிலோ வரை லக்கேஜ் கொண்டு செல்ல முடியும். இருப்பினும், டிக்கெட் வகுப்பைப் பொறுத்து பயணிகளுக்கு லக்கேஜ்களை எடுத்துச் செல்ல பல்வேறு விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏசி முதல் வகுப்பு:

முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்ய நீங்கள் 70 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்லலாம். ஆனால் கூடுதல் கட்டணம் செலுத்துவதன் மூலம் 150 கிலோ வரை லக்கேஜ் கொண்டுசெல்லலாம்.

ஏசி 2ஆம் வகுப்பு:

இரண்டாவது வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்யும்போது 35 கிலோ வரையிலான லக்கேஜிகளை எடுத்துச் செல்ல அனும திவழங்கப்பட்டுள்ளது. ஆனால் கூடுதல் கட்டணம் செலுத்தி அதிகபட்சமாக 70 கிலோ வரை லக்கேஜ்களை உங்களால் எடுத்துச் செல்லலாம்.

ஸ்லீப்பர் வகுப்பு:

ஸ்லீப்பர் கிளாஸில் பயணம் செய்யும் போது 40 கிலோ வரையிலான லக்கேஜ் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. எனினும் ரயில்வே துறை நிர்ணயிக்கும் கட்டணத்தைச் செலுத்தி அதிகபட்சமாக 80 கிலோ எடையுள்ள லக்கேஜ்களை நீங்கள் எடுத்துச் செல்லலாம்.

அதிக லக்கேஜிக்கு அதிக அபராதம்:

Railway Luggage Price

அதிகப்படியான லக்கேஜ் எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு பார்சல் சர்வீஸ் கட்டணத்தைவிட 6 மடங்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. உதாரணமாக 500 கிலோ மீட்டர் தூரம் உள்ள இடத்திற்கு 40 கிலோ எடையுள்ள லக்கேஜ்களை பார்சல் சர்வீஸில் புக் செய்தால் ரூபாய் 109 மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். ஆனால் அதே எடையுள்ள லக்கேஜ்களை விதிகளை மீறி ரயிலில் எடுத்து சென்றால் 109 x 6 = 654 என ஆறு மடங்கு அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com