ரயிலில் பெண்களுக்கும் சலுகைகள்..! மற்றும் இவர்களுக்கும் சலுகைகள்..! அது யார் தெரியுமா..?

Railway Reservation Seat Availability for Senior Citizens

Railway Reservation Seat Availability for Senior Citizens

நண்பர்களே ரயில் பயணம் அனைவருக்கும் பிடிக்கும். ஏனென்றால் அதில் இருக்கும் வசதிகள் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அதில் அதிகளவு கூட்டங்கள் இருக்காது. அதேபோல் இடையில் அதிகமாக நிறுவதற்கும் வழி கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ரயிலில் செல்வதற்கு தான் அதிகமாக அனைவருமே விரும்புவார்கள். ஒரு சிலர் தினமும் வேலைக்கு கூட அதில் தான் செல்வார்கள்.

மேலும் இதனை தொடர்ந்து படிக்கும் மாணவிகள் கூட ரயிலில் தான் பயணம் செய்வார்கள். இதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. இதில் தினமும் பயணம்  செய்தால் அதற்கு தனியாக ரயில் பாஸ் கிடைக்கும். அதேபோல் முன்பதிவு AC கோச் என நிறைய நன்மைகள் உள்ளது. சரி வாங்க இதில் பெண்களுக்கும் சீனியர் சிட்டிசனுக்கும் புதிய நன்மைகளை கொண்டு வந்துள்ளது அது என்ன தெரியுமா..?

Railway Reservation Seat Availability for Senior Citizens:

ஒரு நாளுக்கு நாட்டில் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை, ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை மற்றும் மூத்த குடிமக்கள், பெண்களுக்கு கீழ் ‘பெர்த்’ (கீழ்ப்படுக்கை) கிடைப்பதற்கான வசதிகள் குறித்து மக்களவை உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி (தி.மு.க.) மற்றும் தீபக் அதிகாரி (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தனர்.

ரயிலில் பயணம் செய்யும் போது தண்டவாளத்தின் பக்கத்தில் ஏன் இந்த பெட்டி இருக்குனு தெரியுமா

இந்த நாட்டில் மொத்தமாக நாளுக்கு 10,378 ரயில்கள் இயக்கப்படுகிறது. 2,032 எக்ஸ்பிரஸ் ரயில்களை சேர்த்து 10,378 இயக்கப்படுகிறது. இதில் மூத்த குடிமக்களுக்கு கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு சலுகைகளை பெறப்பட்டது.

2019-2020-ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு அரசு Rs.59,837 கோடி மானியம் வழங்கியது. இந்த சலுகை வழங்கியதில் அந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.1,667 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த வருடம் 45 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் ரயில் பயணத்தில் முன்பதிவு செய்யும் போது அவர்களின் விருப்பத்தை கூறவில்லை என்றாலும் முன்பதிவில் அவர்களுக்கு கீழ் பர்த் கிடைக்க வழி செய்கிறது என்றும், இதில் தூங்கும் வசதிகள் கொண்ட பெட்டிகளில் 6 முதல் 7 படுக்கை என்ற அளவிலும், 3 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 4 முதல் 5 படுக்கை என்ற அளவிலும், 2 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 3 முதல் 4 படுக்கை என்ற  வகையில் ஒதுக்கீடு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

ரயிலில் செல்பவர்கள் இதை தான் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil