ரயில் பயணிகள் இனி நிம்மதியா தூங்கலாம்..! நியூஸ் வந்தாச்சு..!

Railway Rules For Passengers Latest in Tamil

Railway Rules For Passengers Latest in Tamil

பொதுவாக ரயிலில் பயணம் செய்வது என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் இரவு நேரத்தில் பயணம் செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். அதுமட்டுமில்லாமல் குழந்தைகள் ரயிலில் பயணம் செய்ய போகிறோம் என்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனவே அனைவருமே சொந்த ஓஊருக்கு செல்வது, வேலைக்கு செல்வது என தினமும் ரயிலில் பயணித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியன் ரயில்வே ரயில் பயணிகளுக்கு ஏற்கனேவே பல்வேறு விதிமுறைகளை அறியுறுத்தியுள்ளது. அந்த வகையில் இப்பொழுது ஒரு புதிய நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நியூஸ் பயணிகளின் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது. வாருங்கள் அந்த நியூஸ் என்னெவென்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

இந்தியன் ரயில்வே வெளியிட்ட இரவு விதிகள்:

 indian railways latest rules and regulations in tamil

இந்தியன் ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்தியன் ரயில்வே, பயணிகளின் நலன் கருதி ஏற்கனேவே பல விதிகளை விதித்துள்ளது. அந்த வகையில் இப்பொழுது இரவு விதிகள் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியன் ரயிலில் ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் அதிகப்படியான மக்கள் தங்களின் இருப்பிடம், அலுவலங்கள், சுற்றுலா என பலவேறு இடங்களுக்கு சென்று வருகிறார்கள். அவர்களின் வசதிகளுக்கு ஏற்ப இந்தியன் ரயில்வே துறை பல்வேறு அம்சங்களை செய்து தந்துள்ளது. அந்த வகையில் இரவு நேரங்களில் பயணிக்கும் பயணிகளின் நலன் கருதி புதிதாக ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இனிமேல் Train Ticket Booking செய்த இடத்தில் தான் ஏறவேண்டும்..! இல்லையென்றால் உங்களுக்கு Ticket இல்லை

 

இரவு விதிகள்:

 இந்த அறிவிப்பில், இரவு நேரத்தில் ரயிலில் பயணிக்கும் பயணிகள் இயர்போன் பயன்படுத்தாமல் அதிக சத்தத்தில் போனில் பாடல் கேட்பதோ அல்லது மொபைலில் பேசுவது போன்றவற்றை செய்யகூடாது என்று அறியுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே பயணிகள் குறைந்த அளவிலான சத்தில் மட்டுமே போனை பயன்படுத்தவேண்டும் என்று கூறப்படுகிறது.

 மேலும், ரயிலில் இரவு நேரத்தில் எறியக்கூடிய இரவு விளக்குகள் மட்டுமே எரிய வேண்டும் மற்ற விளக்குகள் இரவு 10மணிக்கு மேல் எறியக்கூடாது என்றும் அறியுறுத்தப்பட்டுள்ளது. 
இந்தியாவின் முதல் ரயில் நிலையம் எது?

 

அதுமட்டுமில்லாமல், பயணிகள் புகைபிடித்தல், மதுஅருந்துதல் போன்ற தீய செயல்களில் ஈடுபட கூடாது என்றும், பெட்ரோல் டீசல், மண்ணெண்ணெய் போன்ற எரிய கூடிய பொருட்களை எடுத்து செல்ல கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய விதிமுறைகளை மீறி செயல்படுவார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே துறை எச்சரித்துள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil