ரேஷன் கார்டு பயனாளருக்கு இனி இந்த பொருட்கள் எல்லாம் இலவசமாக வழங்கப்படும்..! மிஸ் பண்ணிடாதீங்க..!

Advertisement

குடும்ப அட்டைதாரர்களுக்கு

இந்தியாவில் குடியுரிமை பெற்ற அனைவருக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆகையால் இந்த ஆவணங்களை பிழையில்லாமல் வைத்து இருக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை ஆகும். அதோடு மட்டும் இல்லாமல் மத்திய மற்றும் மாநில அரசானது நிறைய சலுகைகளை அளித்து வருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழக அரசானது ரேஷன் கார்டு பயனாளருக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட சலுகைகளை பயன்படும் வகையில் கொண்டுவந்ததுள்ளது. இதனை தொடர்ந்து மற்றொரு அறிவிப்பினையும் ரேஷன் கார்டு பயனாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அந்த என்ன அறிவிப்பு மற்றும் அது எப்போதிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது என்ற முழு தகவலினையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ரேஷன் கடை இலவச பொருட்கள்:

ரேஷன் கடையில் மக்களுக்கு அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், சர்க்கரை, பருப்பு மற்றும் ஆயில் என இதுபோன்ற பொருட்கள் மாதந்தோறும் அவர் அவருடைய ரேஷன் கார்டு தகுதிக்கு ஏற்றவாறு கொடுக்கப்படுகிறது.

அதிலும் மாதந்தோறும் அரசி மட்டும் இலவசமாகவும், மற்ற பொருட்கள் அனைத்தும் குறைவான விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு இருக்கையில் கடந்த மாதம் மார்ச் 20-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய அறிவிப்பின் போது ரேஷன் கார்டு பயனாளருக்கு சிறுதானியங்களையும் வழங்க உள்ளதாக அறிவித்து இருந்தது.

குறிப்பிப்பாக ஒவ்வொரு ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் என்றும் அதனை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest News👇👇 சிலிண்டரின் விலை அதிரடியாக 171 ரூபாய் குறைவு.. மகிழ்ச்சியில் மக்கள்..

 இத்தகைய அறிவிப்பின் படி மே மாதம் 3-ஆம் தேதி அன்று நீலகிரி மற்றும் தருமபுரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தலா 2 கிலோ கேழ்வரகு வழங்கும் இந்த திட்டம் ஆனது அமைச்சர் ஆர்.சக்கரபாணியால் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

அதுபோல நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் மாதந்தோறும் 400 டன் கேழ்வரகு ஆனது தேவைப்படுகிறது என்றும் கூட்டுறவுத்துறை தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

மேலும் இத்தகைய கேழ்வரகு வழங்கும் திட்டம் ஆனது அனைவருக்கும் ஒரே மாதிரி நிலையில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு கடைகளிலே சரியான முறையில் பாக்கெட் செய்து வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் விரைவில் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Latest News👇👇 போஸ்ட் ஆபிஸில் PPF கணக்கு வைத்திருக்கிறீர்களா.. அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement