Ration Card Holders SMS Tamilnadu
பொதுவாக நாம் அனைவரும் நம்முடைய அன்றாட தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதற்கு கடைக்கு செல்ல வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால் இத்தகைய கடைகள் அனைத்தும் எந்த நேரமும் திறந்து இருக்குமா என்று நமக்கு தெரியாது. சில நேரத்தில் நாம் கடைக்கு சென்று திரும்பி செல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். இத்தகைய முறையில் ரேஷன் கடையும் அடங்கும். அதாவது மாதந்தோறும் ரேஷன் கடையில் மக்களுக்காக பொருட்கள் வழங்கபடுகிறது. ஆனால் இத்தகைய பொருட்கள் வழங்கப்படும் நேரம் மற்றும் தேதி என்பது குறிப்பாக சொல்ல முடியாது. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் பொது மக்களுக்கு ஒரு நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இது என்ன அறிவிப்பு என்றும் இதன் மூலம் யாரெல்லாம் பயன்பெறலாம் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க நண்பர்களே..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
குடும்ப அட்டைதாரர்களுக்கு:
குடும்ப அட்டைதாரர்களுக்கு என்று மாதந்தோறும் அரிசி, துவரம் பருப்பு, ஆயில், மண்ணெண்ணெய், சர்க்கரை மற்றும் இதர சில பொருட்கள் வழங்கப்படுகிறது. இத்தகைய வசதி மூலம் மக்கள் அனைவரும் பயன் அடைந்து வருகிறார்கள்.
ஆனால் இத்தகைய பொருட்கள் வழங்கப்படும் ரேஷன் கடை ஆனது எந்த நேரத்தில் திறக்கப்படுகிறது என்ற விவரங்கள் மக்களுக்கு தெரியாமல் போவதால் மக்கள் அலைச்சல் மற்றும் அவதிக்குள்ளாகிறார்கள். இத்தகைய பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் ஒரு அறிவிப்பு வந்துள்ளது.
Latest News👉 Jio-வின் செம ஆபர்… அதுவும் 399 ரூபாயில் Family Plan மிஸ் பண்ணிடாதீங்க..
அது என்னவென்றால் பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கார்டுடன் இணைத்துள்ள தொலைபேசி எண்ணில் இருந்து 102 என்று குறிப்பிட்டு பின்பு 9773904050 என்ற நம்பருக்கு SMS செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ரேஷன் கடை திறந்து இருக்கிறதா..? அல்லது இல்லையா..? என்பதை மிகவும் எளிய முறையில் தெரிந்துகொள்ளலாம்.
இதனை போலவே 101 என்று குறிப்பிட்டு பின்பு 9773904050 என்ற நம்பருக்கு SMS செய்வதன் மூலமாக ரேஷன் கடையில் எந்தந்த பொருட்கள் இருக்கிறது என்பதையும் தெரிந்துக்கொள்ளலாம் என்று சிவில் சப்ளை துணை ஆணையர் சண்முகவேல் புதிய முறையினை அறிவித்துள்ளார்.
இத்தகைய வசதியானது முற்றிலும் பொதுமக்களுக்கு அலைச்சல் எதுவும் இருக்காது என்ற நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்படத்தக்க ஒன்றாக உள்ளது.
ரேஷன் கடை பொருட்கள்:
அதுபோல உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் ராஜாராமன் IAS அவர்கள் ரேஷன் கடையில் உள்ள பொருட்கள் திருட்டுபோவதை யாரேனும் கண்டறிந்தால் 18005995950 என்ற இலவச எண்ணிற்கு அழைத்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
Latest News 👉 Rs.2000/- நோட்டை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |