ரேஷன் அட்டை வைத்து இருப்பர்வர்கள் அனைவரும் இதை கட்டாயமாக தெரிந்துக்கொள்ளுங்கள்…!

Advertisement

ரேஷன் அட்டைதாரர்களுக்கு

ரேஷன் அட்டை என்பது இந்திய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இத்தகைய ரேஷன் கார்டு ஆனது முன்பு எல்லாம் கார்டாக இல்லாமல் ஒரு புத்தகம் போன்ற அமைப்பில் இருந்தது. அதனை தொடர்ந்து தான் அதனை ஸ்மார்ட் கார்டாக மாற்றி கார்டு வடிவத்தில் கொடுக்கப்பட்டது. இத்தகைய ரேஷன் கார்டானது மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக பிறந்த 1 வயதிற்கு மேல் உள்ள குழந்தை முதல் வயதான பெரியதவர்கள் முதல் அனைவருக்கும் கருதப்படுகிறது. இப்படிப்பட்ட அம்சங்களை கொண்டுள்ள ரேஷன் கார்டினை நாம் சரியாக பிழைகள் எதுவும் இல்லாமல் வைத்து கொள்ள வேண்டும். அதுமட்டும் இல்லாமல் திருமணம் ஆன பெண்களுக்கு என்று இப்போது ஒரு புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே அது என்ன அப்டேட் என்று முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ள பதிவை தொடர்ந்து படித்து பார்க்கலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ளவர்களுக்கு மத்திய அரசின் அருமையான அறிவிப்பு.. நீங்க சுய உதவிக்குழுவில் இருக்கீங்களா.. 

ரேஷன் கார்டு பயனாளர்:

இன்றைய காலத்தை பொறுத்தவரை ரேஷன் கார்டு ஆனது பெரும்பாலும் பெண்களின் பெயரில் தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில கார்டு மட்டுமே ஆண்கள் பெயரில் உள்ளது.

ஆகவே அத்தகைய ரேஷன் கார்டில் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் பெயரும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இதனை தொடர்ந்து தமிழக அரசானது ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் செப்டம்பர் மாதம் முதல் தகுதிக்கு உட்பட்ட கார்டுகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

நம்மை பொறுத்தவரை இந்த செய்தி தான் தற்போது உள்ள ஒரு அப்டேட் செய்தியாக இருந்து வந்தது. ஆனால் இதனை தொடர்ந்து இப்போது வேறொரு செய்தியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது என்னவென்றால் திருமணம் ஆன பெண்கள் பழைய ரேஷன் கார்டில் இருந்து பெயரினை நீக்க வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல் பழைய ரேஷன் கார்டில் பெயரினை நீக்கியவுடன் புதிய ரேஷன் கார்டிலும் பெயரினை உடனே நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்து முடித்த பிறகு ஆதார் அட்டையிலும் முகவரியினை மாற்றம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இவ்வாறு சரிசெய்வதால் மட்டுமே திருமண ஆன பெண்கள் அவரவருக்கான சலுகையினை பெற முடியும் என்ற நோக்கத்தோடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே சொல்லப்பட்டுள்ளது போல பெயரினை நீக்குதல் மற்றும் சேர்த்தல் போன்றவற்றையினை செய்வதற்கு https://tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் திருத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்⇒ அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்த அதிரடி உத்தரவு.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement