ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி..! இனி அனைத்தும் இப்படி தான் கிடைக்கும்..!

Advertisement

Ration Card News Tamil

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவின் மூலம் ரேஷன் கடையை பற்றி தான் பார்க்க போகிறோம். ரேஷன் கடையில் நிறைய மாற்றம் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. இதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் ரேஷன் கடையில் சந்திக்கும் சில இன்னல்களை அறிந்து இந்த திட்டங்களை கொண்டுவர உள்ளது. இப்போது அனைவருக்கும் ஒரு கேள்வியாக இருக்கும். நல்ல செய்தி என்னவென்று சொல்லாமல் நீளமாக உள்ளது என்று யோசிப்பீர்கள். அந்த யோசனையை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் தொடர்ந்து படியுங்கள். அது என்ன நல்ல செய்தி என்று தெரிந்துகொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Ration Card News Tamil:

பொதுவாக நாம் அனைவருக்கும் ரேஷன் கடைக்கு செல்லும் பழக்கம் இருக்கும் அல்லவா..! அங்கு சென்றால் நமக்கு என்ன தேவை என்று கேட்டு அதற்கான பில் போட்டு, அதன் பின்பு அதனை கொடுத்தால் சாமான்கள் கொடுப்பார்கள். கொடுக்கும் சாமான்கள் அனைத்தும் எடை போட்டு கொடுப்பார்கள். ஆயில் மட்டும் தான் பாக்கெட்டில் கொடுப்பார்கள்.

அரிசி, கோதுமை, பருப்பு, சினி என அனைத்தையும் அளந்து கொடுப்பார்கள். அந்த எடையின் போது நிறைய குறைகள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் பொருட்கள் அனைத்தும் சுத்தமாகவும், சுகாதாரமாக இல்லாமல் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இதனை சரி செய்யும் விதமாக பொருட்கள் அனைத்தும் சுத்தமாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த திட்டம் கொண்டுவர உள்ளது. இனி நியாயவிலை கடையில் பொருட்கள் அனைத்தும் கவரில் வழங்கப்படும் என்று அரசு  அறிவிக்கபட்டுள்ளது.

இந்த நிலையில் தான் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தினை 01.10.2020 முதல் அமல்படுத்துவதற்கான அரசாணை தமிழ்நாடு அரசு மூலம் வெளியிட்டது.

இந்த நடவடிக்கை மூலம் மக்களுக்கு தரமான பொருட்களும், சரியான எடையிலும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு  ரேஷன் கடையில் இனி இதெல்லாம் மாறப்போகுதாம் 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement