வங்கிக்கு அபராதம்
ஹலோ பிரண்ட்ஸ்..! மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு சூழ்நிலையில் பணத்தேவை என்பது ஏற்படும். அப்போது நாம் நமக்கு தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் கேட்போம். அப்படி நாம் கேட்கும் கடன் அவர்களிடமும் இல்லையென்றால் உடனே நாம் என்ன செய்வது என்று சொல்லி புலம்புவோம். அப்படி ஒரு சூழலில் நமக்கு உதவுவது வங்கிகள் மட்டும் தான். ஆமாம் நண்பர்களே நமக்கு உதவவேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்தும் வங்கிகளும் வீட்டு கடன், வாகன கடன், தொழில் கடன் மற்றும் தனிநபர் கடன் போன்ற பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. நாமும் இந்த பதிவின் வாயிலாக தினமும் வங்கிகள் பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று ரிசர்வ் வங்கி அபராதம் விதித்த வங்கி எது என்றும், அபாரதம் விதிக்க என்ன காரணம் என்றும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
வங்கிக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி..!
நம் நாடு முழுவதும் நமக்கு உதவும் நோக்கத்தில் பல வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அதுபோல தேசிய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி தற்போது ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
அதாவது ரிசர்வ் வங்கியானது விதிகளை மீறியதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றிற்கு 84 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று விரிவாக காணலாம் வாங்க..!
ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு |
பொதுத்துறை வங்கிகளில் முன்னணியில் இருந்து வரும் Central Bank of India என்ற வங்கிக்கு ரிசர்வ் வங்கி பெரும் அதிர்ச்சி தந்துள்ளது. அது என்னவென்றால் Central Bank of India ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறியதாக கூறி, அந்த வங்கிக்கு ரூ. 84.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதிக்க காரணம் என்ன..?
மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கையிடல் தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிகளை Central Bank of India மீறியதே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கியானது விரிவாக விசாரணை மேற்கொண்டு வந்தது. அப்படி ரிசர்வ் வங்கி நடத்திய இந்த விசாரணையில் சென்ட்ரல் வங்கி விதிமுறைகளை மீறியது தெரிய வந்துள்ளது.
முக்கியமான வங்கிகள் என்று முதல் 3 இடத்தை பிடித்த வங்கிகள் எது தெரியுமா. |
அதாவது வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதில் வங்கி விதிமுறைகளை மீறியுள்ளது. அதேபோல் SMS கட்டணங்கள் உண்மையான பயன்பாட்டு அடிப்படையில் இல்லாமல் பிளாட் அடிப்படையில் வசூலிக்கப்படுகின்றன. இது போன்ற விதி மீறல்கள் Central Bank of India மீது கூறப்படுகின்றன.
இதன் காரணமாக தான் ரிசர்வ் வங்கியானது சென்ட்ரல் வங்கிக்கு 84.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே வங்கியில் இருந்து வரும் பதிலின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி இறுதி முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது. அனைத்து வங்கிகளின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி அவ்வப்போது கண்காணித்து வருகிறது. இது தொடர்பாக ஆய்வுகளையும் நடத்தி வருகிறது. இதில் ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால் ரிசர்வ் வங்கி கடுமையான முடிவுகளை எடுக்கும் என்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று என்றும் கூறியுள்ளது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |