Rs.2000/- நோட்டை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கி மக்கள் தெரிந்துகொள்வதும் செய்ய வேண்டியதும் என்ன – RBI New Notification for 2000 Notes Withdrawal Tamil
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. இந்தியாவில் தற்போது புழங்கி வரு 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்ன அறிவிப்பு என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக நாம் படித்து தெரிந்துகொள்வோம்.
RBI Withdrawal Rs.2000 Note:
இந்தியாவில் உள்ள ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தற்பொழுது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாயை திரும்ப பெறுவது குறித்து ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை 19.05.2023-ஆம் தேதி வெளியிட்டுள்ளனர் Rs.2000 Denomination Banknotes – Withdrawal form Circulation; will continue as Legal Tender.
இந்த அறிவிப்பின் மூலமாக இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிக்கு 2000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இதனுடன் இந்தியாவில் உள்ள எல்லா ATM இயந்திரத்திலும் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கும் ஆப்சனையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு 8மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியால் , நாடு முழுவதம் ஒரே நாளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன.
இந்த 2000 ரூபாய் நோட்டுகளை போதுமான அளவு பணம் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தாத காரணத்தினாலும், மற்ற மதிப்புடைய பணங்கள் போதுமான அளவு பயன்பாட்டில் இருப்பதன் காரணத்தினாலும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா Clean Note Policy மூலமாக திரும்ப பெறுகின்றன.
ஆக பொதுமக்கள் அனைவருமே அவர்கள் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை எந்த ஒரு வங்கி கிளைகளிலும் கொடுத்து வேறு மதிப்புடைய பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
இல்லையெனில் தங்களது சேவிங் அக்கௌன்டில் டெபாசிட் செய்துகொள்ளலாம். இந்த 2000 ரூபாய் நோட்டுகளை எப்போது வரை மாற்றலாம் என்றால் 23.05.2023 அன்று முதல் 30.09.2023 அன்று வரை அனைத்து வங்கியிலும் மாற்றிக்கொள்ளலாம்.
அதே நேரம் ரொக்க எக்ஸேன்ஞ் என்பது இப்போதைய நிலையில் ₹2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ₹20,000/- வரை கொடுத்து ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம். இந்த வசதி மே 23, 2023 முதல் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ROs) நடைமுறைக்கு வருகிறது.
மேலும் தினசரி ரூ.20,000 வரை எந்த வங்கியிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். செப்டம்பர் 30ம் தேதி வரை இப்படி மாற்றிக்கொள்ள முடியும்.
இந்த 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியம் இல்லை. உங்களிடம் சேமிப்பு கணக்கு இல்லாவிட்டாலும் வங்கிகளுக்கு நேரடியாக சென்று 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |