RBI New Rules for Loan Borrowers
பொதுவாக கடன் வாங்குவது என்பது அனைவரும் பிடித்து செய்யும் ஒரு செயல் அல்ல. ஏனென்றால் ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமை என்பது ஏற்படுகிறது. இவ்வாறு கடன் வாங்கும் போதும் அனைவரும் தற்போது உள்ள சூழலை பற்றி அதிகமாக யோசிப்பது இல்லை. அதாவது கடனுக்கான வட்டி எவ்வளவு, EMI எவ்வளவு மற்றும் கடனுக்கான காலம் எவ்வளவு என இதுபோன்ற தகவலை எல்லாம் அறியாமல் அவசரத்திற்காக கடனை வாங்கி விடுகிறார்கள். ஆனால் கடன் வாங்கிய பிறகு வங்கி எடுக்கும் அதிரடி முடிவினை கண்டு வியந்து போக வேண்டிய நிலைமை என்பது ஏற்படுகிறது. இனி இதுமாதிரி சூழல் என்பது யாருக்கும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்கு ரிசர்வ் வங்கி ஆனது ஒரு புதிய செய்தியை அறிவித்துள்ளது. எனவே அது என்ன நற்செய்து என்ற முழு விவரத்தினையும் தெளிவாக பார்க்கலாம் வாங்க..!
ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு:
மக்கள் கடன் வாங்கும் முறை என்பது ஒன்றாக இருந்தாலும் கூட அதனின் வட்டி விகிதம், கடனுக்கான காலம், EMI தொகை என இவை அனைத்தும் வேறுபட்டு தான் காணப்படுகிறது.
அந்த வகையில் பார்த்தால் கடன் வாங்கும் தொகையினை தவிர மற்ற அனைத்தினையும் வங்கிகளே தீர்மானம் செய்கிறது. இவ்வாறு தீர்மானம் செய்தாலும் கூட அதனை கடன் வாங்கும் நபரிடம் தெரிவிப்பதே கிடையாது.
இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் விதமாக வீட்டுக் கடன் வாங்கும் நபர்களுக்கும் அத்தகைய கடனை அளிக்கும் நபர்களுக்கும் சேர்த்து ஒரு புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளது.
அதாவது கடன் வாங்கியவரின் சம்மதம் அல்லது ஒப்புதல் இல்லாமல் EMI தொகை, கடன் காலம், வட்டி விகிதம் என இவற்றை எல்லாம் மாற்றி அமைக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
மேலும் வட்டி விகிதம் அதிகரிக்கும் போது EMI தொகை அல்லது கடனுக்கான காலம் என இவை இரண்டில் ஏதாவது ஒரு மாற்றி அமைக்க வேண்டிய சூழல் என்பது ஏற்படுகிறது. இது ஒருவரை கடனை அடைக்க விடாமல் மீண்டும் கடனுக்கு உட்படும் விதமாக அமைகிறது என்பது பல பேருக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது.
அதோடு மட்டும் இல்லாமல் கடன் வாங்கினால் அதற்கான தொகையை விட கூடுதலாக வேறு ஏதேனும் பணம் கட்ட விரும்பினால் இதற்கான வழிமுறைகள் என்ன என்பதையும் வங்கி தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இனி ரிசர்வ் வங்கியின் உத்தரவின் படி செயல்படும் போது கடன் வாங்கியவர்களுக்கு அதிக அளவு நன்மையினை பெரும் வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.
ஏர்டெல்லில் 455 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |