வங்கியில் வாங்கிய கடனை தாமதமாக செலுத்தினால் அபராதம் மட்டும் செலுத்தினால் போதும்.! அதற்கான வட்டி கிடையாது..ரிசர்வ் வங்கி உத்தரவு

rbi orders no interest on penalty amount on bank loan in tamil

ரிசர்வ் வங்கி அறிக்கை

கடன் வாங்காமல் பொருளாதாரத்தை சமாளிக்க முடியாது. அந்த வகையில் கடனை வாங்குவதற்கு நிறுவங்கள் மற்றும் வங்கிகள் போன்றவை உதவி செய்கின்றன. அந்த கடன்களை செலுத்துவதற்கு EMI உதவியாக இருக்கிறது. அந்த EMI செலுத்துவதற்கு காலம் தாமதமானால் பேனால்ட்டி (Penalty) சேர்த்து கட்டுவோம்.  இதற்கு சில கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனை பற்றிய தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க..

வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கிடையாது:

கடன் வாங்கிவர்களுக்கு வட்டி கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அது எப்படியென்றால் நீங்கள் மாதம் மாதம் கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கு கால தாமதம் ஏற்பட்டால் அதற்கான அபராத தொகை வசூலிக்கப்படுகிறது.

 கடன் வாங்கியவர்கள் கடனை செலுத்துவதற்கு கால தாமதம் ஏற்பட்டால் அபராதம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அந்த அபராதத்திற்கான வட்டியை வசூலிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  

பட்டா சிட்டா மாற்றுதல் இனி எளிது.! அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

இதற்கு முன்பு அபராதம் மற்றும் அபாரதத்திற்கான வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு மற்றும்  ரிசர்வ் வங்கி இது போன்ற செயல்கள் நடக்க கூடாது என்று கருத்தில் கொண்டு கடனை செலுத்துவதற்கு கால தாமதம் ஏற்பட்டால் அதற்கான அபராதத்தை மட்டும் தனிப்பட்ட முறையில் வசூலிக்க வேண்டும். வாடிக்கையாளர் பெற்ற கடன் அசல் தொகையுடன் அபராதக் கட்டணத்தை இணைத்து வசூலிக்கக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதனால் கடன் தொகை செலுத்த கால தாமதம் ஏற்பட்டால் அபராத தொகை மட்டும் செலுத்தினால் போதுமானது. அதற்கான வட்டியை கட்ட தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இவை எல்லா வங்கிகளுக்கும் மற்றும் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்கள் அனைத்திற்கும் இவை பொருந்தும் என அறிவித்துள்ளது.

பெண்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் அரசின் அசத்தலான திட்டம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil