Withdraws Rs 500 Note in Tamil
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக பணம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். பணம் இருந்தால் தான் இந்த உலகத்தில் உயிர் வாழவே முடியும். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. உயிர் வாழ்வதற்கு பணம் முக்கியமில்லை. உணவும் நீரும் தான் முக்கியம் என்று சொல்வீர்கள். ஆனால் அந்த உணவையும் நீரையும் கூட நாம் இன்றைய நிலையில் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும். இப்போ சொல்லுங்கள் எது முக்கியம்.
சரி அதை விடுங்க. தற்போது ரிசர்வ் வங்கியானது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தது. அதுபோல 2,000 நோட்டுகளை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிகொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 Rs.2000/- நோட்டை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
500 ரூபாய் நோட்டுக்கு வந்த சோதனை..!

தற்போது புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுக்களை பெறவதாக மே 19 ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. மேலும் 2,000 நோட்டுகளை செப்டம்பர் 30, 2023 வரை மாற்றும் வசதிகளை வழங்குமாறு வங்கிகளை மத்திய வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
அதனால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கியானது மற்றொரு பிரச்சனையில் சிக்கியுள்ளது. அது தான் 500 ரூபாய் தட்டுபாடு. இதற்கு காரணம் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றவேண்டும் என்பதற்காக, அதிகமாக பணம் வைத்திருப்பவர்கள் 2,000 ரூபாயை மாற்றி 500 ரூபாயாக பெற்று கொள்கின்றனர்.
| 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்யும் தெரியுமா |

இதனால் நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான கோடி 500 ரூபாய் நோட்டுக்களாக மாறி வருகிறது. எனவே 500 ரூபாய் நோட்டுகளுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக 500 ரூபாய் நோட்டுகளுக்கான தேவை 4 மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் 500 ரூபாய் நோட்டுகள் போல போலி ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு நாடு முழுவதும் மாற்றப்பட்டு வருகின்றன.
அதுபோல ரிசர்வ் வங்கி அச்சடித்த ரூபாய் நோட்டுகளை விட 20 சதவீதம் கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே மக்களுக்கு எது நல்ல 500 ரூபாய் நோட்டு எது கள்ள நோட்டு என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது பெரிய சிக்கலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
| வங்கிக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி.. என்ன காரணம் தெரியுமா |
| மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |














