ரிசர்வ் வங்கி கூறிய அறிவிப்பு
வணக்கம் நண்பர்களே..! உங்களுக்கு பேங்கில் அக்கௌன்ட் இருக்கா..? யாருக்கு தான் பேங்கில் அக்கௌன்ட் இருக்காது என்று சொல்வீர்கள். உண்மை தான் அனைவருக்குமே வங்கிகளில் அக்கௌன்ட் கண்டிப்பாக இருக்கும். நமக்கு ஏதாவது பணம் கஷ்டம் ஏற்படும் போது வங்கிகளால் தான் கடன் கொடுத்து உதவுகிறது. அதாவது, அனைத்து வங்கிகளுமே நமக்கு உதவும் வகையில் வீட்டு கடன், தனிநபர் கடன், வாகன கடன் மற்றும் வணிக கடன் போன்ற பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கியானது வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு ரிசர்வ் வங்கி கூறிய அறிவிப்பு..!
வங்கிகளில் லாக்கர் வைத்திருப்பவரா நீங்கள்..? அப்போ உங்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உதாரணத்திற்கு நீங்கள் SBI வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், திருத்தப்பட்ட பேங்க் லாக்கர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்று ஒரு மெசேஜ் உங்களுக்கு வந்திருக்கும்.
அதாவது அன்புள்ள வாடிக்கையாளரே, திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தை நிறைவேற்ற, உங்கள் வங்கி கிளைக்கு விசிட் செய்யவும். நீங்கள் ஏற்கனவே திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால், நீங்கள் இன்னும் ஒரு Supplementary Agreement -ஐ செயல்படுத்த வேண்டும் என்று SBI வங்கியில் இருந்து உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும்.
வங்கிக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி.. என்ன காரணம் தெரியுமா |
SBI வங்கி மட்டுமின்றி பேங்க் ஆஃப் பரோடாவும் வங்கியில் லாக்கர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 2023 ஜூன் 30 -க்குள் திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. மேலும் இதை மற்ற வங்கிகளும் பின்பற்றும் வாய்ப்பு இருக்கிறது.
மேலும் வங்கிகள் வழங்கியுள்ள லாக்கர் டெபாசிட் ஒப்பந்தங்களை புதுப்பிக்க இந்த 2023 டிசம்பர் 31 வரையில் வங்கிகளுக்கு காலக்கெடுவை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி கூறிய விதிகள் என்ன..?
Agreement On Stamp Paper: திருத்தப்பட்ட பேங்க் லாக்கர் விதிகளுக்கான ஒப்பந்தம் ஸ்டாம்ப் பேப்பரில் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. வங்கிகள் இதை இலவசமாக வழங்க வேண்டும். மேலும் லாக்கர் அமைந்துள்ள வங்கி கிளையில் அசல் ஒப்பந்தம் வைக்கப்பட வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் பேங்க் லாக்கர் ஒப்பந்த நகலை வைத்திருப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.
லாக்கர் FD: லாக்கர் ஒதுக்கீட்டின் போது, லாக்கரை உடைப்பதற்கான கட்டணங்களை ஈடு செய்யக்கூடிய நிலையான ஃபிக்ஸட் டெபாசிட் (FD) பெற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமின்றி லாக்கர் வைத்திருக்கும் வாடிக்கையாளர் லாக்கரை ஆப்ரேட் செய்யாத அல்லது வாடகையை செலுத்தாத சூழல்கள் இதில் அடங்கும்.
முக்கியமான வங்கிகள் என்று முதல் 3 இடத்தை பிடித்த வங்கிகள் எது தெரியுமா. |
வங்கியை குறைகூற கூடாது: மழை, வெள்ளம், நிலநடுக்கம், மின்னல், உள்நாட்டுக் குழப்பம், கலவரம், தீவிரவாத தாக்குதல் அல்லது வாடிக்கையாளரின் அலட்சியம் போன்றவற்றால் லாக்கரில் உள்ள பொருட்கள் சேதமடைந்தால், அதற்கு வங்கி எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.
இழப்பீடு: ஒருவேளை தீ விபத்து, திருட்டு, கொள்ளை, கட்டடம் இடிந்து விழுதல், வங்கியின் அலட்சியம் அல்லது வங்கி ஊழியர்களின் மோசடி போன்றவை காரணமாக லாக்கரில் இருக்கும் பொருட்கள் சேதமடைந்தால், வாடிக்கையாளருக்கு வங்கி இழப்பீடு வழங்க வேண்டும்.
Locker Access Alert: லாக்கர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் உங்கள் Email ID மற்றும் மொபைல் நம்பரை குறிப்பிட்ட வங்கியில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் வங்கிகள் Locker Operation -ன் தேதி மற்றும் நேரம் அடங்கிய Email மற்றும் SMS அலர்ட்டை உங்களுக்கு அனுப்பும்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |