பெண் ஊழியர்களுக்கு பணி நேரம் குறைப்பு..! துணை ஆளுநர் அறிவிப்பு..!

Advertisement

Reduction in Working Hours For Women Government Employees in Tamil

தற்போது ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருமே சரிக்கு சமமாக வேலை பார்க்கிறார்கள். அதேபோல் சில நிறுவனங்களில் 8 மணி நேரம் வேலை பார்ப்பார்கள். ஆனால் அதனை 12 மணி நேரமாக உயர்த்த தமிழ்நாட்டில் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. அதில் புதிய சட்டம் என்னவென்றால் 12 மணி நேரம் வேலை என்பது தொழிலார்களின் விருப்பத்தை பொறுத்து தான். அதன் பின்பு அந்த நிறுவனத்திற்கு மாறுபடும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து  புதுச்சேரி துணை ஆளுநர் அரசு பெண் ஊழியர்களுக்கு வாரத்தில் 2 மணி நேரம் வேலை குறைப்பு என்று அறிவித்தார். இதனை பற்றிய செய்திகளை மேற்கொண்டு பார்ப்போம் வாங்க..! 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Reduction in Working Hours For Women Government Employees in Tamil:

தமிழ்நாட்டில் இரு வாரங்களுக்கு முன்பு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க -வின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன. ஆகவே இதற்கு குரல் வாக்கெடுப்பு முறையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதனை பற்றி செய்திகளை படிக்க..!

பெண்கள் மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு 1 கோடி நபர்கள் தேர்வு  யார் தெரியுமா

அதேபோல் 12 மணி நேர வேலை சட்டத்துக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆதரவு தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து புதுச்சேரியில் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் அரசு பெண் ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும், அதாவது வெள்ளிகிழமை காலை 11 மணிக்கு வந்தால் போதுமானது. இதனை அரசு துறையில் நிறைவேற்றினால் போதும். இதனை அடுத்து தனியார் நிறுவங்களும் இதனை பின்பற்றும் என்று நம்பிக்கை உள்ளதாக தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.

இனி 8 மணி நேரம் அல்ல வேலை 12 மணி நேரம் தான் வேலை சட்டம் என்ன சொல்கிறது வாங்க பார்க்கலாம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement