Repo Rate in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம் அனைவருக்குமே ஏதாவது ஒரு சூழலில் பணத்தேவை என்பது ஏற்படும். அப்போது நாம் என்ன செய்வோம். தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்குவோம். அவர்களிடமும் பணம் இல்லையென்றால் நாம் பணம் கிடைக்கும் என்று நம்பி செல்வது வங்கியை மட்டும் தான். நமக்கு உதவும் வகையில் அனைத்து வங்கிகளும் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. நாம் எப்படி வங்கிகளில் கடன் வாங்குகிறோமோ அதேபோல வங்கிகளும் அதற்கு மேல் இருக்கும் RBI என்ற நிறுவனத்திடம் இருந்து கடனை பெறுகின்றது. இது நம்மில் பலருக்கும் தெரிந்த விஷயம் தான். சரி தற்போது ரிசர்வ் வங்கியானது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்ன என்று விரிவாக காணலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉https://bit.ly/3Bfc0Gl |
ரிசர்வ் வங்கி கூறிய முக்கிய அறிவிப்பு..!
அனைத்து வங்கிகளுக்கும் தலைமையாக இருப்பது ரிசர்வ் வங்கி தான். அதுபோல ரிசர்வ் வங்கியானது பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக உயர்த்தியது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு கொள்கை கூட்டத்திலும் ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டியை உயர்த்திக் கொண்டே வருகிறது. அதுபோல 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டியை 6.50 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியது.
Google Pay யூஸ் பண்றீங்களா.. அப்போ இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா |
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு EMI சுமை அதிகமாகும். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை உயர்த்தும் போது வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவார்கள். இது கடன் வாங்கிய மக்களுக்கு பெரும் சுமையாக இருந்தது.
இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத கொள்கை கூட்டம் கடந்த 6 ஆம் தேதி தொடங்கி இன்று அதாவது 08.06.2023 முடிவடைந்தது.
இந்த கொள்கை கூட்டத்தின் முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார். அந்த தகவலின் படி இந்த முறையும் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது வங்கியில் கடன் வாங்கிய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
வங்கிகள் எடுத்த அதிரடி முடிவு.. இனி UPI மூலம் இவ்வளவு தான் பணம் அனுப்ப முடியும் |
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |