வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய குட் நியூஸ்..! யாரெல்லாம் கடன் வாங்கி இருக்கீங்க..!

return property documents 30 days rbi rules in tamil

Return Property Documents 30 Days RBI Rules 

பொதுவாக மக்கள் அனைவரும் நிதி ரீதியான எந்த உதவியாக இருந்தாலும் உடனே வங்கிக்கு தான் சென்று உதவி கேட்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் வங்கி மற்றும் நிதி நிறுவனத்திடம் இருந்தும் சரியான பதிலோ அல்லது சலுகையோ கிடைக்கிறது. இத்தகைய நிலையானது ஆரம்பத்தில் இருந்தாலும் கூட குறிப்பிட்ட வருடத்திற்கு பின்போ அல்லது கடன் செலுத்திய பிறகு அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கான ஆவணங்களை பெறுவதில் எண்ணற்ற சிக்கல்கள் வருகிறது. இத்தகைய சிக்கல் இனி வரும் களங்களில் நடைபெறக்கூடாது என்பதனால் ரிசர்வ் வங்கி ஒரு புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளது. ஆகையால் அது என்ன அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரப்போகிறது என்ற செய்தியினை விரிவாக பார்க்கலாம் வாங்க..!

ஆதார் கார்டு வச்சு இருக்கவங்க டிசம்பர் மாசத்துக்குள்ள இதை செஞ்சுடனுமாம்..! வெளியானது புது நியூஸ்..

ரிசர்வ் வங்கி அறிவிப்பு:

ரிசர்வ் வங்கி ஆனது வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு என்று புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளது. இத்தகைய அறிவிப்பு ஆனது முற்றிலும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவோருக்கு நன்மை அளிக்கும் விதமாக உள்ளது.

ஆகவே அத்தகைய விதிமுறை அல்லது அறிவிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • கடன் வாங்கியவர்கள் அவர்களுடைய முழு கடனையும் திருப்பி செலுத்திய பிறகு 30 நாட்களுக்குள் அதற்கான முழு ஆவணங்களையும் வங்கி கடன் வாங்கியவருக்கு திருப்தி செலுத்தி விட வேண்டும்.
  • ஒருவேளை அப்படி செலுத்த முடியவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன என்பது பற்றி கடன் வாங்கியவருக்கு தெரிவிக்க வேண்டும். அத்தகைய காரணம் ஏற்றுக்கொள்ளும் படி இருக்க வேண்டும்.
  • மேலும் இந்த காரணம் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை என்றால் ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் என்று அபராத கட்டணம் கடன் வாங்கியவருக்கு செலுத்த வேண்டும்.
  • அதுமட்டும் இல்லாமல் அசல் சொத்து ஆவணங்களுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால் அதற்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் தான் அதற்கான பொறுப்பினை ஏற்று செய்ய வேண்டும். மேலும் அதற்கான கால அவகாசம் 30 நாட்கள் அளிக்கப்படுகிறது.
  • கூட்டுக்கடன் வாங்குபவர்கள் மற்றும் ஒரே கடன் வாங்குபவர்கள் திடீரென்று இறந்து விட்டால் அதற்கான ஆவணங்களை அவர்கள் குடும்பத்தினராகளே முழு பொறுப்பு ஏற்று பெற்றுக்கொள்ளலாம்.
  • மேலும் ஒவ்வொரு வங்கி மற்றும் நிதி நிறுவனம் அசல் சொத்து ஆவணங்களின் காலக்கெடு தேதி மற்றும் திரும்ப பெறும் இடத்தினை குறிப்பிட வேண்டும்.
  • கடைசியாக கடன் வாங்குபவர்கள் அவர்களது கடனுக்கான ஆவணத்தை வங்கி கிளையிலோ அல்லது அலுவலகத்திலோ பெற்றுக்கொள்ளும் வசதி என்பது உள்ளது.

இத்தகைய விதிமுறைகள் மூலம் கடன் வாங்குபவர் மற்றும் வங்கிகளுக்கு இடையே பிரச்சனைகள் ஏற்படாது. மேலும் இந்த விதிமுறைகள் டிசம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

5 லட்சம் தொழில் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா..?

வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவித்த குட் நியூஸ்..! என்னனு தெரியாத 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil