CBSE தனியார் பள்ளியில் ஒரு ரூபாய் செலவில்லாமல் உங்கள் குழந்தையை இலவசமாக சேர்க்கலாம்! அதற்கு இதுமட்டும் பண்ணுங்கள்..!

Advertisement

CBSE/ தனியார் பள்ளியில் செலவில்லாமல் உங்கள் குழந்தையை இலவசமாக சேர்க்கலாம்! அரசே செலவை ஏற்றுக்கொள்ளும்..! RTE Admission 2023 24 Open Date in Tamil..!

நண்பர்களுக்கு வணக்கம்..  இன்று நாம் RTE திட்டம் குறித்த தகவல்களை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் தனது குழந்தையை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அனைத்து பெற்றோர்களுக்குமே அந்த குடுப்பணை கிடைத்துவிடுவதில்லை. காரணம் நிதி நிலை தான். தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒவ்வொரு ஆண்டும் பணம் அதிகம் செலவாகும். ஆக இதன் காரணமாகவே பலரது பெற்றோர்கள் தனது குழந்தையை தண்ணியார் பள்ளியில் படிக்க வைக்கமுடியாமல், அரசு பள்ளியில் படிக்க வைக்கின்றன. தனியார் பள்ளிக்கூடங்களில் ஏழை எளிய மாணவர்களைச் சேர்ப்பது எட்டா கனியாகவே பெரும்பாலோனோருக்கு இருக்கிறது. அவற்றை மாற்றியமைக்கவே கடந்த 2009-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் எனப்படுகிற RTE கல்வித் திட்டம் ஆகும்.

இந்த திட்டம் கீழ் உங்கள் செல்லை குழந்தையை உங்கள் ஊரில் அருகில் இருக்கும் CBSE மற்றும் தனியார் பள்ளிகளில் நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்யலாம் சேர்க்கலாம். உங்கள் குழந்தைக்கான குழு கல்வி செலவையும் அரிதே கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகளில் செலுத்திவிடும். இந்தத் திட்டத்தில் 2023-24 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பிக்கும் தேதியை அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், யாரை அணுக வேண்டும். போன்ற தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

RTE திட்டத்த்திக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி எப்பொழுது?

RTE Admission 2023 24 Open Date in Tamil 
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 20-03-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 20-04-2023

RTE 2023-2024-ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு – RTE Admission 2023 24 Open Date in Tamil :

இந்த 2023-ஆம் ஆண்டு L.K.G மற்றும் 1-ஆம் வகுப்பு சேர இருக்கும் குழந்தைகளை இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் விண்ணப்பிக்கும் பள்ளிக்கூடம் 1 கிலோ மீட்டர் பரப்பளவில் சுற்றியுள்ள பள்ளிகூடமாக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 5 பள்ளிக்கூடங்கள் வரை இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தின் கீழ் மெட்ரிகுலேஷன் மற்றும் CBSE தனியார் பள்ளிகளில் 25% ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். உதாரணத்திற்கு 100 இடங்கள் அவர்கள் பள்ளியிலிருந்தால் 25 இடங்களை இவர்களுக்குக் கட்டாயமாக ஒதுக்க வேண்டும். அப்படி தேர்வு செய்யப்படுகிற மாணவர்களுக்கான கல்வித் தொகையை அரசே செலுத்திவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஜூன் மூன்று முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..!

விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்:

இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களாக 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவை.. நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினர் ஆகியவர்கள் பயன்பெறலாம்.

நலிவடைந்த பிரிவினரில் விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமானம் 2,00,000/- விட அதிகமாக இருக்கக்கூடாது.

வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் அனைத்து மதத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களான BC, MBC, SC, ST ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவில் ஆதரவற்றோர் , மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தேவைப்படும் சான்றிதழ்கள்:

  1. மாணவர் புகைப்படம்
  2. பிறப்பு சான்று
  3. பெற்றோர் அடையாள அட்டை
  4. முகவரி சான்று
  5. சாதி சான்றிதழ்
  6. இருப்பிட சான்றிதழ்
  7. வருமான சான்றிதழ்
  8. சிறப்புப் பிரிவில் விண்ணப்பிக்கக் கூடியவர்கள் அந்தந்த துறையில் அதற்கான சான்றிதழை வாங்க வேண்டும். உதாரணத்திற்கு மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி சான்றிதழை அந்தத் துறையினரிடம் வாங்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

மார்ச் மாதம் 20 தேதியன்று https://rte.tnschools.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். பிறகு அங்கு கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை சரியாக உள்ளிட்டு விண்ணப்பிக்கவும். கண்டிப்பாக குழந்தையின் பெற்றோர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement