2022 – 2023 ஆண்டிற்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு..!

RTE Scheme Details in Tamil

கல்வி உரிமை சட்டம் 2022 | RTE Scheme Details in Tamil 2022

கல்வி உரிமை சட்டம் (RTE), பிரிவு 12 (1) சி, சமூகத்தின் பின்தங்கிய மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளின் குழந்தைகளுக்கு 25% இடஒதிக்கீட்டில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவசமாக கல்வி கற்க ஒரு அருமையான திட்டத்தை அறிவித்துள்ளது அதுகுறித்த தகவல்களை இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

கட்டாய கல்வி உரிமை சட்டம் 2022:

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களது பிள்ளைகளுக்கு நல்ல கல்வி அறிவை அளிக்க வேண்டும். சிறந்த கல்வி நிறுவனத்தில் அவர்கள் படிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் ஏழை குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளால் தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணம் செலுத்தி படிக்க முடியாத சூழல் உள்ளது.

அதற்காகவே “குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்கள் 2013-14 ம் கல்வியாண்டு முதல் 2018-2019 கல்வியாண்டு வரை மாணவர்கள் சேர்க்கப்பட்டு பயன் பெற்றுள்ளனர். அதற்கான சிறப்பு சட்டத்தின் பெயரே RTE (Right To Education)”

RTE 2022-2023ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009, சட்டப்பிரிவு 12(1)(சி)-இன்படி 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர்கள் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் (LKG அல்லது ஒன்றாம் வகுப்பு) அதாவது எந்த பள்ளி ஆரம்பிக்கிறதோ அந்த வகுப்பில் சேர்க்கைக்கு 20.04.2022 தேதி முதல் 18.05.2022 தேதி வரை rte.tnschool.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக குழந்தையின் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம். 18.05.2022 தேதி வரை விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்தில், சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகையில் 21.05.2022 அன்று மாலை 05.00 மணிக்குவெளியிடப்படும்.

குழந்தையின் வயது தகுதி:

  • LKG வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01-08-2018 to 31-07-2019 ஆண்டிற்குள் பிறந்தவர்களாக இருக்க  வேண்டும்.
  • ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01-08-2016 to 31-07-2017 ஆண்டிற்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்:

  1. மாணவர் புகைப்படம்
  2. பிறப்பு சான்று
  3. பெற்றோர் அடையாள அட்டை
  4. முகவரி சான்று
  5. சாதி சான்றிதழ்
  6. இருப்பிட சான்றிதழ்
  7. வருமான சான்றிதழ்

குழந்தையின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் ஆன்லைன் மூலம் இணையம் வழியாக நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும் முதன்மை கல்வி அலுவலர், மாவட்டக் கலவி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய அலுவலகங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு:

நிர்ணகிக்கப்பட்ட இடங்களைவிடக் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின்  சம்பந்தப்பட்ட பள்ளியில் 23.05.2022 அன்று குலுக்கல் செய்யப்படு சேர்ககைக்கான குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் பெயர் பட்டியல்கள் விண்ணப்ப எண்ணுடன் 24.05.2022 அன்று இணையதளத்தில் மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளி தகவல் பலகையில் வெளியிடப்படும். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை 29.05.2022-க்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும்.

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி விண்ணப்பிப்பது எப்படி? இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉How to Apply RTE Online in Tamil

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Notification
அதிகாரப்பூர்வ இணையதளம் https://tnschools.gov.in/

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil