Sachet Loan Google Pay in Tamil
இந்த கால தலைமுறையினர் அனைவரும் சாதாரண நிலையில் இருந்து டிஜிட்டல் உலகத்திற்கு மாறிக்கொண்டே வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பொருளாதார நிலையை பொறுத்தவரை சற்று அதிகமாகவே முன்னேற்றம் அடைந்து கொண்டே வருகிறது. அப்படி பார்த்தால் சாதாரணமாக பணம் அனுப்பும் முறையில் கூட முன்னேற்றம் அடைந்து விட்டது. அதாவது நாம் யாருக்காவது பணம் அனுப்ப வேண்டும் என்றால் எந்த விதமான அலைச்சலும் இல்லாமல் G-pay, Phone pay மற்றும் Paytum என இத்தகைய முறையில் பணம் அனுப்பி விடுகிறோம். அந்த வகையில் இவை எல்லாம் நம்மிடம் உள்ள பணத்தினை எளிய முறையில் அனுப்புவதற்காக மட்டுமே செயல்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது. இவ்வாறு இருந்தாலும் கூட நம்முடைய அவசர தேவைக்காக பணம் தேவைப்பட்டால் நாம் வங்கிக்கு சென்று அவர்களிடம் உதவி கேட்க வேண்டிய நிலையே ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் உதவும் ஒரு நிலையாக கூகுள் நிறுவனம் ஆனது கடன் வழங்கும் ஒரு புதிய அம்சத்தை கொண்டுவந்துள்ளது. ஆகவே அது என்ன என்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கூகுள் பே மூலம் கடன் பெறும் வசதி:
இந்தியாவின் முன்னணி நிறுவனமான கூகுள் ஆனது நாட்டின் சிறு வணிகங்களுக்கு உதவும் விதமாக கூகுள் பே பயன்பாட்டில் Sachet என்ற கடன் பெரும் அம்சத்தை கடந்த வியாழக்கிழமை அன்று அறிமுகம் செய்ய உள்ளது.
மேலும் இந்த அமைப்பை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள சிறு வணிகர்கள் கடனாக 15,000 ரூபாயினை பெறலாம். அதேபோல் இந்த கடனுக்கான தவணை முறையாக 111 ரூபாய்க்கும் குறைவாக நீங்கள் செலுத்தலாம். இத்தகைய கடனை கூகுள் நிறுவனம் ஆனது DMI Finance உடன் சேர்ந்து வழங்குகிறது.
எனவே இந்த Sachat கடன் ஒரு குறுகிய கால கடன் ஆகும். இதில் உங்களுக்கான கடன் தொகையாக 10,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் கடனுக்கான காலமாக 7 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை வழங்கபடுகிறது.
இப்படிப்பட்ட கடனை மாதம் 30,000 ரூபாய் வருமானம் பெறுபவர்கள் பெறலாம். அதேபோல் தற்போது இந்த முறை அடுக்கு 2 நகரங்களில் தொடங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து ePayLater உடன் சேர்ந்து கூகுள் பே வணிகர்களுக்கான கடன் பெறும் வசதியினையும் தொடங்கி உள்ளது. அதோடு மட்டும் இல்லாமல் கூகுள் இந்தியா ICICI வங்கியுடன் இணைந்து UPI-யில் கிரெடிட் லைன்களை அறிமுகம் செய்து உள்ளது.
அதேபோல் Axis Bank உடன் சேர்ந்து கூகுள் பேயில் தனிநபர் கடன்களின் போர்ட்ஃபோலியோவையும் கூகுள் விரிவுபடுத்தியுள்ளது.
கூகுள் அறிவித்துள்ள இந்த கடனை நீங்கள் ஆன்லைன் மூலமாகவே பெற முடியும்.
அடேங்கப்பா BSNL-ல தினமும் 2 GB டேட்டா அப்புறம் 84 நாட்களுக்கான வேலிடிட்டியா புதுசா இருக்கே
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |