Salary Hike After 7th Pay Commission
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம் அனைவருக்குமே அரசு துறையில் வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்த ஆசை ஒரு சிலருக்கு மட்டும் தான் இருக்கும் என்று நினைக்காதீர்கள். மனிதனாக பிறந்த அனைவருக்குமே இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆசை என்றால் அது அரசு வேலை தான். ஏன் அனைவருமே அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்ற காரணம் நமக்கு தெரியும்.
அதாவது அரசு வேலை கிடைத்தால் காலத்திற்கும் கவலை இல்லை. வாழ்நாள் முழுவதும் அதிக சம்பளமும் ஓய்வூதியமும் கிடைக்கும் என்பதே இதற்கு காரணமாக இருக்கிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. அதை பற்றி விரிவாக காண இந்த பதிவை முழுதாக படிக்கவும்.
என்ன சொல்றீங்க..! இனி இந்த ஆப்களில் UPI மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் கிடையாதா |
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..!
அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் நல்ல சம்பள உயர்வு இருக்கும் என்று அரசு கூறியுள்ளது.
பொதுவாக அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்பதற்காக அகவிலைப்படி மற்றும் ஊதிய உயர்வினை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்து வருகின்றது.
Gpay, PhonePe மூலம் பணம் அனுப்புபவரா நீங்கள் இனி அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும் |
அதுபோல கடந்த நவம்பர் மாதம் ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து 7 -வது சம்பள குழு கமிஷன் மூலம் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பளம் உயர்த்தப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல் மீண்டும் 4% அகவிலைப்படி உயரும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 47.58 லட்ச ஊழியர்கள், 69.76 லட்ச ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 7 வது சம்பள குழு கமிஷன் மூலம் ஊதிய உயர்வு தோராயமாக 18,000 ரூபாயில் இருந்து ரூ.26,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
பேருந்தில் செல்லும் பெண்களுக்கு ஒரு குட் நியூஸ்..! நீங்க இதை தெரிஞ்சிக்கலனா எப்படி |
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |