Salary Hike For Electrical Workers in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக நாம் அனைவ்ருமே தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அந்த வகையில் இன்று அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். உடனே எந்த அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்று யோசிப்பீர்கள். அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுதாக படித்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் கரண்ட் பில் குறிப்பதில் இவ்வளவு மாற்றமா வெளியானது புதிய தகவல்
மின் வாரிய ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!
20 ஆண்டு காலமாக பணிபுரியும் மின் வாரிய ஊழியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மின் வாரிய ஊழியர்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆனால் தமிழக மின் வாரிய ஊழியர்களுக்கு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. இதனால் ஊழியர்கள் சம்பளம் உயர்த்த வேண்டும் என்று போராட்டம் செய்தனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது.
அதனை தொடர்ந்து தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், 5 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க மின் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது.
இதையும் படியுங்கள்⇒ திருமணம் ஆக போகும் பெண்ணா நீங்கள் அப்போ அரசு அறிவித்த புதிய விதியை தெரிஞ்சிக்கோங்க
அதாவது சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்த 19 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன், ஊதிய உயர்வு தொடர்பாக, உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த கூட்டத்தில் நிதித் துறை கூடுதல் செயலர் பிரசாந்த் வடநேரே அவர்கள் பேசும்போது, மின் வாரியம் நிதி நெருக்கடி மற்றும் ஊழியர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு, ஊதிய உயர்வு வழங்கப்படும்என்று கூறியுள்ளார். அதேபோல, 2022 ஏப்ரல் முதல் நிலுவைத் தொகையுடன் கூடிய ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும், 20 ஆண்டு பணி முடித்தவருக்கு கூடுதல் ஊதிய உயர்வு உண்டு என்றும் உறுதியாக கூறியுள்ளார்.
இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
தமிழக அரசு அறிவித்த ஒரு நற்செய்தி இனி விவசாயிகளுக்கு பிரச்சனை இருக்காதாம்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |