SBI Raises Interest Rates on Deposit Fund
நாம் பணத்தை வீட்டில் சேமித்தால் அதிலிருந்து வட்டி தொகை மற்றும் மெச்சுருட்டி தொகை என எதுமே கிடைக்காது. அதனால் முதலீடு திட்டங்களில் பணத்தை டெபாசிட் செய்கிறோம். அதில் நிறுவனங்கள் அல்லது வங்கிகள் மற்றும் தபால் துறையில் பணத்தை சேமிக்கின்றோம். இது போல சேமிப்பதனால் வட்டி தொகை என்பது கிடைக்கும்.
அந்த வகையில் SBI வங்கியில் பணத்தை டெபாசிட் செய்திருப்பீர்கள். இதில் ஒவ்வொரு வகையான திட்டத்திற்கும் ஒவ்வொரு வகையான தகுதி மற்றும் கால அளவு, வட்டி போன்றவை மாறுபடும். அந்த வகையில் ஸ்டேட் பேங்க் ஆனது வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தியுள்ளது. அவை எவ்வளவு என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
எவ்வளவு உயர்த்தியுள்ளது:
கடந்த டிசம்பர் 27ம் தேதி வட்டி விகிதத்தை பற்றி வெளியிட்டுள்ளது. SBI வங்கியில் வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டியை 0.5% உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதமானது சில கால அளவுகளுக்கு மட்டும் பொருந்தும்.
அதாவது 180 நாட்கள் முதல் 210 வைப்பு நிதிகளுக்கு 5.75% வட்டி விகிதம் சதவீதம் வழங்கப்படுகிறது.
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை உள்ள வைப்பு நிதிகளுக்கு 3.5% வட்டி வழங்கப்படும்.
211 நாட்கள் முதல் 1 ஆண்டுக்கும் குறைவாக உள்ள வைப்பு நிதிகளுக்கு 6% வட்டி வழங்கப்படுகிறது.
எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam |
மூன்று ஆண்டுகள் முதல் ஐந்தாண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 25 பிபிஎஸ் அதிகரித்து 6.5 சதவீதத்தில் மாற்றப்பட்டுள்ளது.
வங்கியானது நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்களுக்கும் குறைவாகவும், இரண்டு வருடங்கள் முதல் மூன்று வருடங்கள் மற்றும் ஐந்து வருடங்கள் வரையிலும் மற்றும் 10 வருடங்கள் வரையிலான வட்டி விகிதங்கள் 6.8 சதவிகிதம், 7 சதவிகிதம் மற்றும் 6.5 சதவிகிதமாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |