ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி வாங்க 75 லட்சம் வரை மானியம்..! SC ST Subsidy Loans for Business in Tamil
புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் SC – ST பிரிவை சேர்ந்தவர்களுக்கு ஆட்டோ, டாக்சி, டூரிஸ்ட் வாகனங்கள், ஆம்புலன்ஸ், பேருந்து, மினி பஸ், சரக்கு போக்குவரத்துக்கான லாரி, ட்ரக், போன்றவற்றை வாங்க 35% மானியம். அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது என்று தகவல். அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்திரியலாம் வாங்க.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி, ட்ரக் வாங்க அதிகபட்சம் ரூ.75 இலட்சம் வரை மானியத்துடன் கடனுதவி:
அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினை (நீட்ஸ்) 2012-13 முதல் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த, திட்டத் தொகை ரூ.10.00 லட்சத்துக்கு மேலும் ரூ.500.00 லட்சத்தை மிகாமலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது.
தனிநபர் மட்டுமன்றி தகுதி பெற்ற ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்த கூட்டாண்மைப் பங்குதாரர் (பார்ட்னர்ஷிப்) அமைப்புகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
பட்டியல் பழங்குடி இனத்தினர் ஆட்டோ, டாக்சி, டூரிஸ்ட் வாகனங்கள், ஆம்புலன்ஸ், பேருந்து, மினி பஸ், சரக்கு போக்குவரத்துக்கான லாரி, ட்ரக், போன்றவற்றை இத்திட்டத்தில் மானியத்தில் பெறலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உழவன் செயலியில் இனி அறுவடை இயந்திரங்கள் (ம) உரிமையாளர் விவரங்களை அறியலாம்..!
தகுதி:
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்த பட்சம் +2 தேர்ச்சி – பட்டம் – பட்டயம் – தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது:
வயது 21-க்கு குறையாதிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 வயதும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு 45 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தகவல் குறித்த விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தினை நேரடியாகவோ அல்லது 04322-221794, 9840961739 மற்றும் 9487173397 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
RD-க்கு 9.5% வட்டி வேண்டுமா? அப்போ இந்த வங்கியில் டெபாசிட் செய்யுங்கள்..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |