இப்படியெல்லாம் அப்டேட் வந்தா..! வாட்சப் விட்டு வெளியே போக மனசே வராதே..!

Advertisement

Schedule Whatsapp Group Call Update in Tamil

யார் கையில் இப்போது ஸ்மோர்ட் போன் இல்லாமல் இருக்கிறது. அனைவரின் கையிலும் போன் உள்ளது. அவ்வளவு ஏன் இப்போது கடைக்கு போனாலும் பணத்தை எடுத்து செல்வது கிடையாது. ஏனென்றால் பணம் கொடுத்து பொருட்கள் வாங்குவது இல்லை. அனைத்துமே ஆன்லைன் வசதிகள் தான். அதன் மூலம் தான் அனைத்துமே தெரிந்து கொள்கிறோம்.

அதேபோல் அந்த போனில் எவ்வளவு தான் செயலிகள் இருந்தாலும் வாட்சப் இல்லாமல் இருப்பதில்லை. அதேபோல் அதில் சென்று நாம் யாரிடமும் பேசாமலும் இருப்பதில்லை. ஆனால் இந்த வாட்சப்பை விட தற்போது மற்ற செயலிகள் விரைவாக பல அம்சம் கொண்டு வருகிறது. ஆனால் தற்போது வாட்சப் நிறுவனம் மற்ற எந்த செயலியை விட எந்த விதத்திலும் இது குறைந்தது இல்லை என்பதை தெரியப்படுத்த தற்போது புதிய அம்சங்களை கொண்டுவரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் என்னென்ன அம்சம் உள்ளது என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க..!

Schedule Whatsapp Group Call Update in Tamil:

schedule group call whatsapp

நாம் வீடியோ கால் பேசும் போது அதில் யார் இருக்கவேண்டும் என்று நாம் பேசும் போது தான் முடி செய்வோம். அந்த நேரத்தில் தான் மற்றவர்களுக்கு வேலை அதிகமாக இருக்கும். ஆகவே நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீடியோ கால் பேச நினைத்தால் அதற்கு முன்பே அந்த நேரத்தை Schedule செய்து அதன் மூலம் கால் பேசி கொள்ளமுடியும்.

இதற்கு பெயர் Schedule Group Call ஆகும். இதன் மூலம் அவர்களின் நேரத்தை முன்பே சரியாக முடிக்க முடியும். அந்த வகையில் இது நல்ல அப்டேட் இதுவும் விரைவில் வர உள்ளது.

இதனை நாம் பயன்படுத்த கால் பட்டனை டச் செய்தால் அதில் Schedule ஆப்சன் காட்டும். அதில் உங்களின் நேரத்தை குறித்துக்கொண்டு அதில் யார் யார் இருக்கலாம் என்று முன்பே செட் செய்து கொள்ளலாம். அதேபோல் இதற்கு பெயர்களை கூட வைத்துக் கொள்ளலாம்.

யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 உரிமை தொகை தமிழக அரசு வெளியிட்டுள்ளது தெரியுமா..?

Web Whatsapp Quality Image:

schedule group call whatsapp

வாட்சப் வெப் பயனர்களுக்கு இந்த அப்டேட் நல்ல செய்தி தான். அதாவது இனிமேல் புகைப்படங்களை மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் போது அதே தரத்துடன் அனுப்பும் வசதி வர உள்ளது.

குறிப்பாக சோஷியல் செயலிகளுக்கு போட்டி கொடுக்கும் வகையில் இந்த அப்டேட் இருக்கும். அதேபோல் அப்லோடு செய்யும் நேரத்தை குறைக்கும் வகையில் இந்த அப்டேட் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் வாட்ஸப் பயனர்களுக்கு இது நல்ல செய்தி தான்.

நல்ல செய்தி தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉  99 ரூபாய்க்கு ஒரு வருஷம் வேலிடிட்டியை வழங்கும் BSNL..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement