இனி இவர்களுக்கு எல்லாம் ரயில் கட்டணத்தில் தள்ளுபடியாம் தெரியுமா ..?

Advertisement

மூத்த குடிமக்களுக்கு ரயில் சலுகை

பொதுவாக நாம் பயணம் செய்வது என்பது சாதாரணமான ஒன்று. இந்த பயணத்தை மகிழ்ச்சியாக கழிக்கும் வகையில் அதனை வெவ்வேறு முறையில் அவர் அவர்களுக்கு ஏற்றவாறு செல்கிறார்கள். ஆனால் நம்மில் பாதி நபர்கள் ரயில் பயணத்தை தான் அதிகமாக விரும்புகின்றனர். ஏனென்றால் மற்ற பயணங்களை ஒப்பிடும் போது ரயில் பயணத்தில் ஆரோக்கியம் ரீதியாகவும் மற்றும் பணம் ரீதியாகவும் மிகவும் வசதியாக உள்ளது என்பது தான் பலருடைய கருத்தாக இருந்து வந்துள்ளது. அதனால் இதுநாள் வரையிலும் பெரும்பாலான மக்கள் அதனை தான் விரும்புகின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் சில வருடங்களாக மூத்த குடிமக்களுக்கு என்று சில சலுகைகள் ரயில் பயணம் செல்ல எடுக்கும் டிக்கெட்டுகளில் இருந்து வந்தது. ஆனால் அது திடீரென்று கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மூத்த குடிமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உங்களுடைய அதிர்ச்சியினை இன்பமாக மாற்றுவதற்கு ஒரு குட் நியூஸ் ஒன்று வந்துள்ளது. அது என்ன குட் நியூஸ் யாருக்கு அந்த நியூஸ் என்று இன்றைய News பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

ரயில்களில் மூத்த குடிமக்கள் சலுகை எப்போது கிடைக்கும்:

இதுநாள் வரையிலும் நிறுத்து வைக்கப்பட்ட ரயில் பயணத்தின் மூத்த குடிமக்களுக்கான சலுகை மீண்டும் எப்போது தான் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்து வருகிறது.

அத்தகைய எதிர்பார்ப்பிற்கான ஒரு குட் நியூஸை தென்னக ரயில்வே நிலையம் அமல்படுத்த உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அது என்னவென்றால் கொரோனா காரணமாக நிறுத்து வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை விரைவில் அமலுக்கு வரும் என்றும் அதில் சில தகுதிகளில் மட்டும் மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ இனிமேல் Train Ticket Booking செய்த இடத்தில் தான் ஏறவேண்டும்..! இல்லையென்றால் உங்களுக்கு Ticket இல்லை..!

ரயில் பயணத்தின் கட்டண சலுகை மொத்தமாக 53% இருக்கும் என்றும் அதில் அதிகபட்சமாக மூத்த குடிமக்களுக்கு 40% முதல் 50% வரை கட்டாயமாக இருக்கும் என்றும் தென்னக ரயில்வே நிலையம் கூறியுள்ளது.

இந்த சலுகையானது மூத்த குடிமக்கள் ரயில் பயணத்திற்காக டிக்கெட் எடுக்கும் போது அனைத்து வகுப்புகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

எனவே இந்த மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை விரைவில் தகுதி பற்றிய முழுவிவரங்களுடன் அமுலுக்கு கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்⇒ இனி ரயில் வரும் வரை காத்திருக்க வேண்டாம்..! இந்த குட் நியூஸ் தெரியாதா உங்களுக்கு..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement