உலகக் கோப்பை கிரிக்கெட் 2023
பொதுவாக கிரிக்கெட் என்பது பலருக்கும் பிடித்த ஒரு விளையாட்டாக இருக்கிறது. அந்த வகையில் கிரிக்கெட் ஆட்டம் விளையாட ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ஒரே ஆரவாரம் மற்றும் பரபரப்பு ஆனது காணப்படும். இப்படி இருக்கும் பட்சத்தில் கிரிக்கெட் விளையாட்டினை விரும்பும் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு அணியின் மீது விருப்பம் இருக்கும். ஆகையால் எந்த அணி பிடித்து இருக்கிறதோ அதனையுடைய ஆட்டத்தினை காண்பதற்கு என்று எண்ணற்ற ரசிகர்கள் இருந்து கொண்டு தான் உள்ளார்கள். அதேபோல் அந்த ஆட்டத்தின் போது எந்தந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பதிலும் நிறைய சந்தேகங்கள் ஆனது இருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஆனது நேற்றைய தினம் ஆரம்பம் ஆகிறது. இதனை தொடர்ந்து இந்தியா அணிக்கான ICC ஆட்டம் நடைபெற விருக்கும் பட்சத்தில் அதில் முக்கிய வீரரான சுப்மன் கில்லு இடம் பெறுவாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆகையால் அதனை பற்றிய செய்தியை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இந்தியா கிரிக்கெட் மேட்ச் அக்டோபர் 8:
உலகக்கோப்பைக்கான ஆட்டமானது அக்டோபர் மாதம் 05-ஆம் தேதி 2023 அன்று தொடங்கி உள்ள நிலையில் அத்தகைய போட்டியின் இறுதியில் நியூஸ்லாந்து அணியானது வெற்றி பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியா Vs ஆஸ்திரேலியா அணிக்கான அடுத்த ஆட்டம் அக்டோபர் 8-ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெற இருக்கின்ற போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரரான சுப்மன் கில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழும்பியுள்ளது.
ஏனென்றால் ஆட்டத்தின் தொடக்க வீரரான இவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக தெரியப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் இவரது உடல் நலம் பொறுத்து தான் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்புகள் இருக்கிறது.
அந்த வகையில் சுப்மன் கில் இந்த ஆண்டில் மட்டும் அவர் ஒருநாள் போட்டிகளில் 1230 ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டும் இல்லாமல் உலகக்கோப்பைக்கான ஒருநாள் போட்டியிலும் இவரது பெயரானது 2-வது இடத்திலும் இருக்கிறது.
இவற்றை எல்லாம் கருதி இந்திய அணியானது கேப்டன் ரோகித் சர்மா உடன் சுப்மன் கில்லுவை தொடக்க வீரராக களமிறங்குவதாக இந்திய அணி திட்டமிட்டு இருந்தது. ஆனால் இப்போது சுப்மன் கில்லுவின் நிலைமை குறித்து இந்திய அணி பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது.
சுப்மன் கில்லுவின் இடத்தில் வேறு யார்..?
சென்னையில் நடைபெற இருக்கின்ற ஆஸ்திரேலிய அணிக்கான ஒரு நாள் போட்டியில் சுப்மன் கில் தொடக்க வீரராக விளையாட முடியாத காரணத்தினால் இளம் வீரர் இஷான் கிஷன் அல்லது கே.எல்.ராகுல் இவர்களில் யாரவது ஒரு நபர் தொடக்க வீரராக களம் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |