Silence Unknown Callers Whatsapp
இப்போது யார் கையில் தான் ஸ்மோர்ட் போன் இல்லாமல் இருக்கிறது. அனைவரின் கையிலும் ஸ்மோர்ட் போன் இருக்கும். பெரும்பாலும் போன் இருந்தால் இந்த உலகையே சுற்றி வரமுடியும் போல, அந்த அளவிற்கு மாற்றம் உள்ளது. நாம் போனில் நமக்கு தெரியாத விஷயம் என்று அனைத்தும் தெரிந்துகொள்ள முடிகிறது.
போனில் வாட்ஸப் செயலி இல்லாமல் யாரும் இல்லை. அதேபோல் இதில் தான் நண்பர்களிடம் பேசுவது, CHAT செய்வது என்று நிறைய விதத்தில் உள்ளது. ஒருவரின் வீட்டிற்குள் செல்வது என்றால் அதில் Location என்ற ஆப்சன் கிளிக் செய்து அதன் மூலமும் பயன்படுகிறது. இதில் சமீப காலமாக மற்ற செயலிகளுக்கு போட்டி அளிக்கும் விதமாக நிறைய அப்டேட் செய்தி வருகிறது.
போற போக்கை பார்த்தால் மற்ற எந்த விஷயத்திற்கும் மூன்றாவதாக வேற எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்ய தேவை இல்லை. சரி அதை விடுங்க தற்போது ஒரு வசதியை அறிமுகம் செய்து வருகிறார்கள். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் ⇒ வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைத்தால் கவனமாக வையுங்கள்..! இல்லையென்றால் உங்கள் மீது புகார் அளிக்கப்படும்
Silence Unknown Callers Whatsapp:
சமீப காலத்தில் அவதார் படங்களை அப்டேட் செய்து அதில் தற்போது 100 படங்களை தேர்ந்தெடுக்க பல விதமான அம்சங்களை கொண்டு வருகிறது.
அதனை தொடர்ந்து மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸப்பில் தேவையற்ற கால்களை முடக்க பல அம்சத்தை கொண்டு வருகிறது.
தற்போது புதிய அப்டேட் என்னவென்றால் தெரியாத நபர்களிடம் கால் வந்தால் அதனை அமைதிபடுத்தும், அதேபோல் அதனை கால் பட்டியலில் காண்பிக்கிறது.
வாட்ஸப்பின் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பிற்காக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஸ்பேம் அழைப்புகளைத் தவிர்ப்பதன் மூலம் இடையூறுகளைக் குறைக்கும் என்று WABetaInfo இன் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 இதுக்கெல்லாம் புதிய அப்டேட் வந்தா Whatsapp எங்கேயோ போயிடும்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |