சிம் கார்டு வாங்க புது ரூல்ஸ்
மொபைலை பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு சிம் கார்டு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதனை நாம் கடைகளில் சென்று ஆதார் கார்டு அல்லது ஏதவாது ஒரு proof கொடுத்து இதுநாள் வரைக்கும் வாங்கி கொண்டிருக்கின்றோம். டிஜிட்டல் உலகில் நாளுக்கு நாள் இது போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி மோசடி செய்யும் பணம்பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதை தடுக்கும் வகையில் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இனி சிம் வாங்க வேண்டும் என்றால் புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அது என்ன விதிமுறை என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
சிம் கார்டு வாங்குவதில் விதிமுறை:
ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது, பொதுமக்களிடம் மோசடி செய்யும்சம்பவங்களும் புதுப்புது வழிமுறைகளில் கையாளுகிறார்கள். இதற்கு அடித்தளமாக இருப்பது சிம் கார்டு தான். சிம் கார்டுகள் தவறான வழியில் பயன்படுத்துவதை தவிர்க்கவும், போலி சிம் கார்டுகளை கண்டறியவும் மத்திய அரசு புதிய விதியை அறிவித்துள்ளது.
எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam |
இனி சிம் கார்டை வாங்க வேண்டுமென்றால் பயோமெட்ரிக் விவரங்களை கொடுக்க வேண்டும், இதனால் போலி சிம் கார்டு வாங்குவதை தவிர்க்கலாம். மேலும் kyc படிவத்தை பூர்த்தி செய்து பயோமெட்ரிக் அடையாளத்தை சமர்ப்பித்தால் மட்டுமே சிம் கார்டு வாங்க முடியும்.
இந்த புதிய விதிமுறைகள் 2024 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது. இத்தகைய, விதிகளை மீறி சிம் கார்டு விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2024 பொங்கல் பரிசுதொகுப்பு மற்றும் டோக்கன் தேதி!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |