மத்திய அரசு அறிவிப்பு.. ஆதார் மற்றும் பான் இல்லாமல் சேமிப்பு கணக்கை திறக்க முடியாது..

Advertisement

சிறு சேமிப்பு திட்டம் விதிகள்

மனிதர்களின் வாழ்க்கையில் ஆதார் கார்டு ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆதார் இல்லையென்றால் அரசின் எந்த சலுகைகளையும் பெற முடியாது. அதே போல் சிறுசேமிப்பு திட்டங்களில் ஆதார் மற்றும் பான் ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதனை பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..

மத்திய அரசின் அறிவிப்பு.! சிறுசேமிப்பு திட்டத்திற்கான புதிய விதிகள்:

அரசின் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு  ஆதார் மற்றும் பான் கார்டு முக்கியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் PPF, சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தபால் அலுவலக சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) போன்ற திட்டங்களுக்கு ஆதார் மற்றும் பான் முக்கியம் என்று கூறியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..! இந்த மாஸான நியூஸை தெரிஞ்சிக்கலனா எப்படி.. 

 சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் போது ஆதார் மற்றும் பான் எண் கொடுக்க  வேண்டியிருக்கும். முதலீடு செய்யும் போது ஆதார் மற்றும் பான் இல்லையென்றால் அதற்காக அப்ளை செய்து வாங்கி விட வேண்டும். முதலீடு செய்த 6 மாதங்களுக்குள் ஆதார் மற்றும் பான் எண்ணை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  

சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் போது 6 மாதங்களுக்குள் ஆதார் மற்றும் பான் எண்ணை வழங்காவிட்டால் கணக்கு தொடர்ந்து செலயல்படாது என்றும், ஏற்கனவே சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கவிட்டாலும், அக்டொபர் 1-ம் தேதி முதல் நீங்கள் முதலீடு செய்த திட்டம் செலயல்படாது என கூறியுள்ளது.

சரமாரியாக குறைந்த கேஸ் சிலிண்டரின் விலை..  இன்னமும் உங்களுக்கு இந்த நியூஸ் தெரியாம இருக்கா.. 

சிறு சேமிப்பில் முதலீடு செய்யும் போதே பான் எண்ணை கணக்கு சமர்ப்பிக்க வேண்டும். அப்படியில்லை என்றால் கணக்கு தொடங்கிய  இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும்.

கணக்கில் சேமிப்பு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும் முதலீட்டாளர்கள், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள், மேலும் ஒரு மாதத்துக்கு சிறுசேமிப்பு திட்டங்களிலிருந்து 10 ஆயிரம் ரூபாயை எடுப்பவர்கள் என அனைவரும் பான் கார்டு சமர்ப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement