ஊட்டி மலை ரயில்
பொதுவாக அனைவரும் கோடை விடுமுறை வந்துவிட்டால் குடும்பத்தினருடன் அல்லது உறவினருடன் சுற்றுலாவிற்கு செல்வது வழக்கமான ஒன்று. அப்படி கூறியவுடன் முதலில் நியாபகம் வருவது ஊட்டி தான். எத்தனை முறை ஊருக்கு சென்றாலும் சலித்து போகாத ஒரு ஊர் என்றால் அது ஊட்டி தான். அத்தகைய ஊட்டியில் அனைவருக்கும் செல்வதற்கு காரணமாக ஒன்று என்றால் அது ஊட்டி மலை ரயில் தான். அத்தகைய ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற செயல். ஏனென்றால் பள்ளி விடுமுறை நாட்கள் என்பது அதிக கூட்டமாக காணப்படுவதால் ஊட்டி மலை ரயிலில் செல்வதற்கு டிக்கெட் கிடைக்காமல் போகிவிடுகிறது. இதுநாள் வரையிலும் இப்படி இருந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது மக்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.
இதையும் படியுங்கள்⇒ ரயில் பயணிகளுக்கு இப்படி ஒரு அசத்தலான அறிவிப்பா.. அப்படி என்ன அறிவிப்பு தெரியுமா..
ஊட்டி மலை ரயில் டிக்கெட்:
பொதுவாக நாம் நிறைய ஊருக்கு சுற்றுலா சென்று இருப்போம். ஆனால் அதில் ஏதாவது ஒன்று தான் நமக்கு புது விதமான அனுபவத்தை அளிக்கிறது. அந்த வரிசையில் ஊட்டி மலை ரயில் பயணமும் ஒன்று.
ஏனென்றால் காலை 7 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து செல்லக்கூடிய மலை ரயில் ஆனது மலைப்பாதைகள் வழியாக குகைக்குள் புகுந்து செல்கிறது. இப்படிப்பட்ட பயணமானது சுற்றுலா பயணிகளுக்கு ஒரு தனி அனுபவத்தையும் மற்றும் மகிழ்ச்சியம் அளிக்கிறது.
ஆனால் இத்தகைய மலை ரயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் பெறுவது என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாக உள்ளது. நாம் செல்லும் நேரத்தில் டிக்கெட் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
இவற்றை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே நிலையமானது மக்களுக்கு ஒரு புதிய அறிவிப்பினை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அறிவித்துள்ளது.
அது என்னவென்றால் சிறப்பு ரயில்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப்படும் என்றும் இது ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
ஊட்டி மலை ரயில் டிக்கெட் முன்பதிவு:
மேலும் இத்தகைய பயணத்தில் முன் பதிவு பெற வேண்டும் என்றால் IRCTC என்ற இணையதளத்தில் மேட்டுப்பாளையம் To உதக மண்டலம் என்ற குறியீட்டினை பயன்படுத்தி முன் பதிவு செய்யலாம் என்றும் தென்னக ரயில்வே நிலையம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்⇒ திடீரென பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு.. வாகன ஓட்டிகளுக்கு இந்த விஷயம் இன்னும் தெரியாதா..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |