கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்த தேவையில்லை முதல்வர் அறிவிப்பு

students who lost their parents in corona no need to pay fees in private school

முதலமைச்சர் அதிரடி உத்தரவு

வணக்கம் நண்பர்களே முதலமைச்சர் தினசரி அனைத்தும் மக்களின் நலன் கருதி நிறைய விஷயங்களை செய்துகொண்டு வருகிறார். அதில் அதிகமாக அவரின் கவனத்தில் இருப்பது கொரோனவால் பெற்றோர்களை இழந்த குடும்பத்திற்கு நிறைய விஷயங்களை அறிவித்து வருகிறார். அதே போல் வேலையில்லாத இளைஞர்களுக்கு நிறைய உதவிகளையும் அவர்களுக்கு மாதம் மாதம் உதவி தொகை பெறவும் திட்டத்தை அறிவித்துள்ளார். அதே போல் நேற்றுவரை புதிய திட்டத்தை அறிவித்துள்ளார் வாங்க அதனை படித்து தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தவும்.

தமிழக அரசு அதிரடி உத்தரவு:

கொரோனா தொற்றால் பிள்ளைகளை இழந்து தவிர்க்கும் பிள்ளைகள் தனியார் பள்ளியில் படித்தால் அவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்று நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பெற்றோர்களை இழந்து ஆதரவியின்றி தவிக்கும் பிள்ளைகளை கண்டறிந்து அவர்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு தமிழக அரசு உதவும். இதற்கு தனியாக மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டு சிறப்பு பணிகளை செய்து வருகிறார்கள்.

தொடர்ந்து முதலமைச்சர் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் தலா 5 லட்சம் வழங்கப்படும். இந்த பணம் டெபாசிட் செய்யப்படும் அவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடையும் போது அந்த குழந்தைகளுக்கு வட்டியோடு வழங்கப்படும்.

ஆதரவியின்றி தவிக்கும் பெண்களுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு உரிமை வழக்கப்படும்.

அந்த குழந்தைங்களின் பட்டப்படிப்பு மற்றும் விடுதி கட்டணம் போன்ற அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்.

விடுதி மற்றும் காப்பங்களில் இல்லாமல் உறவினர் மற்றும் பாதுகாவலரின் ஆதரவில் வாழும் குழந்தைகளை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு செலவுக்காக அவர்களின் பெயரியல் மாதம் தோறும் தலா ரூபாய் 3000/- உதவி தொகையாக வழங்கப்படும்.

இந்த தொகையையானது அவர்கள் 18 வயதை அடையும் வரையில் வழங்கப்படும். இதனை கடந்த மாதம் மே 29 தேதி அறிவித்தார்.

அரசு நல திட்டங்களின் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த திட்டம் குழந்தைங்களுக்கு கணவன் மற்றும் மனைவியை இழந்த குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோருக்கும் இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். என்று முதல்வர் அறிவித்தார் இந்நிலையில் நேற்று (01.08.2022) கொரோனாவால் பெற்றோர்களை இழந்து மாணவர்கள் தனியார் பள்ளியில் படித்துவந்தார்கள் என்றால் அவர்களுக்கு தேவையான கல்வி கட்டணத்தை அரசே ஏற்றி நடத்தும் என்று முதலவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து முதல்வர் அவர்கள் முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பிய அறிவிப்பில் கூறிருப்பது. பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் தனியார் பள்ளியில் படித்தால் அவர்களை நிறுத்தாமல் தொடர்ந்து அதே பள்ளியில் கல்வியை தொடரவேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதேபோல் அவர்கள் தொடர்ந்து அதே கல்வியில் படிக்கிறார்களா என்பதை உறுதி செய்யவேண்டும். இந்த ஆண்டு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு கருத்துருவினை உடனடியாக தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழுவிற்கு அனுப்பிட வேண்டும். அதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்கவேண்டும்.இவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

அரசுப் பள்ளியில் காலை உணவு திட்டம்..! அரசாணை வெளியிட்டது..!

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil