காய்கறிகள், பழங்கள் நேரடி விற்பனைக்கான வாகனங்கள் வாங்க விவசாயிகளுக்கு மானியம் – விண்ணப்பிக்க கடைசி நாள் 24.01.2023

Subsidy for Farmers to Buy Vehicles in Tamil

Subsidy for Farmers to Buy Vehicles in Tamil

விவசாய நண்பர்கள் அனைவருக்கும் ஒரு ஹாப்பி நியூஸ்.. அது என்ன நியூஸ் என்று தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கா.. அப்படின்னா பதிவை தொடர்ந்து படியுங்கள். காய்கறிகள் மற்றும் பழங்களை நுகர்வோர்களிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கு மானியத்தில் வாகனங்கள் வாங்க விவசாயிகள் வருகிற ஜனவரி 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு யாருக்கெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். எப்படி விண்ணப்பிக்க வேண்டும். போன்ற தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

ஃபார்ம் டூ ஹோம் திட்டம்:

தமிழக அரசு, விவசாயிகள் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்பவர்களாக மட்டும் இல்லாமல் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்களின்றி நேரடியாக நுகர்வோாிடம் விற்பனை செய்ய உழவர் சந்தை திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.

ஊரடங்கு காலங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக வீட்டிற்கே விற்பனை செய்த முயற்சி நுகர்வோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதன் காரணமாக இந்த சேவையை விரிவுபடுத்த சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் மற்றும் கடலூர் ஆகிய 6 மாநகராட்சிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் விவசாயிகளின் தோட்டத்தில் சாகுபடியாகும் காய்கறிகள் மற்றும் பழங்களை நுகர்வோர்களை தேடி வழங்கிட ஏற்றதாக ‘பார்ம் டூ ஹோம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
100 நாள் வேலை திட்டத்தில் சில அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு..!

எவ்வளவு மானியம் வழங்கப்படும்:

இந்த திட்டத்தில் கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்தினை ஊக்குவிக்கும் வகையில் நடமாடும் வாகனங்கள் வாங்குவதற்காக 40 சதவீதம் மானியம் அல்லது ரூ.2 லட்சம் நிதிஉதவி அரசு மூலம் வழங்கப்படும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்?

  1. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. 21 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.
  3. சொந்த, குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் நிலஉடமை சான்று, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் சமர்ப்பிக்க வேண்டும்.
  4. பயனாளிகளுக்கு ஒரு வாகனத்திற்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற உழவர் சந்தை அலுவலகத்தில் இது குறித்த விவரங்களை அறிந்து விண்ணப்பித்து பயன்பெறவும்.

குறிப்பு:

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil