PF கணக்கு
பொதுவாக வேலை செய்யும் ஆண் மற்றும் பெண் இருவரில் யாராக இருந்தாலும் சரி ஆரம்ப காலத்தில் ஒரு சிறிய அளவிலான தொகையினை சேமித்து வைத்து இருப்பார்கள். ஏனென்றால் அந்த சேமிப்பு தொகையானது வருங்காலத்தில் பயன்படும் என்று கருதி சேமித்து வருகிறார்கள். ஆனால் சில குறிப்பிட்ட வருடங்களுக்கு முன்பாக அவர் அவர் வேலை புரியும் அலுவலகத்தில் PF என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையினை அவருடைய சம்பளத்தில் இருந்து பிடிப்பு பணமாக பிடித்து வருகிறது. இவ்வாறு பிடிக்கும் தொகையினை வேலை புரியும் நபர் ஓய்வு பெற்ற பிறகு குறிப்பிட்ட வட்டியுடன் சேர்த்து தொகையினை திருப்பி கொடுக்கும். இது தான் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது இதில் ஒரு மாற்றம் வந்துள்ளது. அந்த மாற்றத்தினால் PF கணக்கு வைத்து இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு குட் நியூஸ் காத்திருக்கிறது. ஆகாயல் அந்த செய்தியினை பற்றி விரிவாக பதிவை முழுமையாக படித்து பார்க்கலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ ஆதார் அட்டை வைத்துருப்பவர்களுக்கு இலவச வாய்ப்பினை மத்திய அரசு அறிவித்துள்ளது..! இதற்கான கடைசி தேதி ஜூன் 15..
Supreme Court Judgement on EPF Pension in Tamil:
PF கணக்கு வைத்து இருக்கும் மற்றும் தொழிலங்களுக்கு இரண்டு முக்கிய அறிவிப்பை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அது என்னவென்றால் ரூபாய் 15,000-திற்கு மேல் அடிப்படை ஊதியம் மட்டுமே பெரும் நபர்களிடம் இருந்து பிடிப்பு பணமாக 8.33% பிடிக்க வேண்டும் ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது.
மற்றொரு அறிவிப்பு என்னவென்றால் ஓய்வு ஊதியம் பெரும் தொகையின் வரம்பினை 6,500 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
மேலும் இப்போது EPSO 1995-ன் கீழ் அதிகமான ஓய்வு ஊதியத்தை பெற விரும்பும் நபர்கள் மார்ச் மாதம் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஆனால் தொழிலார்கள் விண்ணப்பிக்கும் தேதியினை நீட்டிக்க வேண்டி கேட்டுக்கொண்டதன் காரணமாக மீண்டும் மே மாதம் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கடைசி தேதியினை அறிவித்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் EPSO திட்டத்தின் கீழ் ஓய்வு ஊதியம் பெற 2014 செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெற்ற நபர்கள் முன்பாகவே விண்ணப்பித்து இருந்தால் அது இப்போது ஏற்றுக்கொள்ளப்படும்.
அதுவே EPSO திட்டத்தின் கீழ் அதிக ஓய்வு ஊதியம் பெற விண்ணப்பித்து அதனை EPSO முன்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்ற நபர்கள் இப்போது மீண்டும் விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பினையும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உதாரணமாக நீங்கள் 50,000 ரூபாய் மாத சம்பளமாக பெற்றால் உங்களுடைய சம்பளத்தில் இருந்து பிடிப்பு பணமாக 15,000 ரூபாய் பிடிக்கப்படும் அதுபோல EPSO-ன் பங்களிப்பானது அதில் 1,250 ரூபாயாக இருக்கும்.
ஆகவே மறக்காமல் மே 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து அதிக ஓய்வு ஊதியத்தை பெறுங்கள். மிஸ் பண்ணிடாதீங்க.
இதையும் படியுங்கள்⇒ ரேஷன் கார்டு வைத்திருப்பர்வர்களுக்கு இனி இதுவும் இலவசம்…! இந்த குட் நியூஸ் எப்போ வந்துச்சு..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |