விவசாயிகளுக்கு ரூபாய் 3.6 லட்சம் மானியம்..! எதற்காக வழங்கப்படுகிறது தெரியுமா..!

tahdco scheme details in tamil

துரித மின் இணைப்பு திட்டம்

பொதுவாக விவசாயம் செய்வதற்கு நிலம் மற்றும் பயிரை நடுவதற்கு மூலப்பொருட்கள் எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவிற்கு தண்ணீரும் மிகவும் அவசியம். ஏனென்றால் என்ன தான் நாம் பார்த்து பார்த்து பயிரை நடவு செய்தால் கூட அதற்கு சரியான நேரத்தில் தண்ணீர் விடவில்லை என்றால் பயிர் வாடி வீணாகிவிடும். அதன் பின்பு உங்களுடைய விவசாயதிகற்கு எந்த விதமான பயனும் இல்லாமல் போகிவிடும். அதிலும் சிலர் சொந்தமாக பம்புசெட் வைத்து இருப்பார்கள். ஆனால் அவர்களிடமும் நாம் எப்போதும் தண்ணீர் கேட்க முடியாது. இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து தாட்கோ திட்டமானது விவசாயிகளுக்கு ரூபாய் 3.6 லட்சம் மானியம் வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த மானிய தொகையினை யாரெல்லாம் பெறலாம் என்று விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ மீண்டும் அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஓய்வு பெரும் வயது குறைப்பு..! இது தெரியாத உங்களுக்கு..!

விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம்:

தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தாட்கோ அறிவித்துள்ளது. அதன் மூலம் இந்த திட்டமானது இப்போது அமல்படுத்த படுகிறது.

இத்தகைய துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் 3.6 லட்சம் ரூபாய் மானியம் ஒத்துக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 900 ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும் மற்றும் 100 பழங்குடியினர் விவசாயிகளுக்கும் பிரித்து மொத்தமாக 1000 நபர்களுக்கு வழங்க உள்ளது.

அதனால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளிடம் இருந்து www.tahdco.com ஆன்லைன் மூலம் துரிதமின் இணைபிறக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இதனை விண்ணப்பிக்க உள்ள விவசாயிகளின் நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அல்லது கிணறு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அதுபோல விண்ணப்பிக்க உள்ள பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் விவசாயிகள் அவர்களுடைய பெயரில் பட்டா மற்றும் நிலம் இருத்தல் வேண்டும்.

மேலும் 5 எச்.பி அமைத்திருக்கும் விவசாயிகளுக்கு 25,000 ரூபாயும், 7.5 எச்.பி அமைத்திருக்கும் விவசாயிகளுக்கு 27,500 ரூபாயும், 10 எச்.பி அமைத்திருக்கும் விவசாயிகளுக்கு 30,000 ரூபாயும் மற்றும் 15 எச்.பி அமைத்திருக்கும் விவசாயிகளுக்கு 40,000 ரூபாயும் பிரித்து வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

  • நிலத்தின் சிட்டா அடங்கல்
  • சர்வே எண்
  • மின்வாரியத்தில் பதிவு செய்த ரசீது
  • கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு
  • நிலத்தின் வரைபடம்
  • Pasport Size Photo

இதையும் படியுங்கள்⇒ ஆதார் கார்டு வைத்து இருக்கும் அனைவருக்கும் இந்த குட் நியூஸ் இன்னும் தெரியாத..?என்னா சொல்றீங்க.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil