பிளஸ்டூ தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் வாங்கிய கூலி தொழிலாளியின் மகள்..!
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற +2 பொது தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வெளியிட்டார். கிட்டத்தட்ட 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வினை எழுதியுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நந்தினி என்ற மணவை 6 பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனையை பெற்றுள்ளார். 12-ஆம் வகுப்பு சோர்வில் அனைத்து படங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்களை மாணவி ஒருவர் பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தமிழக்தில் இதுவரை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இல்லாத ஒரு வரலாற்று சாதனையை திண்டுக்கல் மாவட்ட அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாதவி நந்தினி படைத்துள்ளார்.
மாணவி நந்தினி செய்தியாளர்க்கிடம் கூறுவது. நான் ஒரு கூலித் தொழிலாளியின் மகள், கூலித் தொழிலாளியின் மகள் என்பதால் என்னால் என்ன செய்துவிட முடியும் என கவலைப்படவில்லை. எனக்கு கல்விதான், படிப்புதான் சொத்து என என் பெற்றோர் சொல்லி சொல்லி வளர்த்தனர். அதனையே நானும் இடைவிடாமல் கடைபிடித்தேன். அதனால்தான் இவ்வளவு மதிப்பெண்களை என்னால் பெற முடிந்துள்ளது. நம்பிக்கையுடன் முயற்சித்தால் அனைத்தும் சாத்தியமாகும். எனக்கு ஆடிட்டராக வேண்டும் என்பது விருப்பம். அதற்கான மேல்படிப்புகளை படிக்க உள்ளேன்.
மேலும் மாணவி நந்தினி LKG முதல் 12-ஆம் வகுப்பு வரை இதே திண்டுக்கல் மாவட்ட அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தான் படித்து வருகிறார். மேலும் இப்பள்ளியின் பள்ளி தாளாளர் ஜெயபால், தலைமை ஆசிரியர் அகிலா, தமிழ் ஆசிரியர் அனுராதா, ஆங்கில ஆசிரியர் தீபா, பிற ஆசிரியர்கள் மரிய சாந்தி ராஜலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்தனர் என்றும் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு அனைவரும் ஊக்கமளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |