புதிய அமைச்சரவையில் மாற்றம்..! புதிய பதவியேற்பு யாருக்கு..!

Advertisement

Tamil Nadu Cabinet Reshuffle 2023

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றது. வெற்றி பெற்ற நிலையில் தற்போது 2 வருடம் கடந்த நிலையில் தற்போது புதிய அமைச்சரவை மாற்றியமைக்க உள்ளது. இந்த மாற்றங்களில் சில பதவிகளிலிருந்து மாற்றி அமையுமே தவிர எந்த பதவியில் உள்ளவர்களும்  நீக்கப்படவில்லை. அதேபோல் சில நாட்களுக்கு முன்பு சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ -வான உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது அமைச்சரவை குறித்தும் பேசியிருந்தார்கள். அப்படி பேசும்போது சில மாற்றங்கள் அடையும் என்று தெரிவிக்கப்பட்டது.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Tamil Nadu Cabinet Reshuffle 2023:

அமைசச்சரவை குறித்து பல பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வளம் வந்துகொண்டு உள்ளது என்று அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மூத்த அமைச்சர் துரைமுருகன், ‘தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவு செய்ய வேண்டியது முதல்வர் தான் என்று தெரிவித்தார்.

Latest News 👉👉  Google வெளியிட்டுள்ள முக்கிய செய்தி.. மே 10 -ம் தேதிக்கு பிறகு கூகுளின் தலையெழுத்தே மாறப்போகிறது.. 

அதேபோல் தமிழக அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல் பால்வளத் துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரின் பதவியேற்பு விழா வரும் 11 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

அதேபோல் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உட்பட குறைந்தது 3 அமைச்சர்கள் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், உள்ளாட்சி நிர்வாகம், நிதி, தொழில்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளுக்கு அமைச்சர்கள் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

புதிய அறிவிப்பு  ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் டிக்கெட் எடுக்கவில்லையா இனி பயப்பட வேண்டாம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement