ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இன்னும் இணைக்கவில்லையா..! அப்போ நீங்க தான் முதல்ல இதை தெரிஞ்சுக்கனும்..!

Advertisement

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு

இன்றைய காலமானது நம் முன்னோர்களின் காலத்தினை ஒப்பிட்டு பார்க்கும் போது முற்றிலுமாக வேறுபட்டு காணப்படுகிறது. அதற்கு ஒரு உதாரணம் என்றால் வீட்டில் இருக்கும் மின்சாரம் தான். ஏனென்றால் இப்போது யாரும் சிறிது நேரம் கூட வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருப்பது இல்லை. அவ்வளவு முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கின்றோம். நாம் நாள் முழுவதும் மின்சாரம் பயன்படுத்துவது போல  அதில் இருக்கும் சில விதிமுறைகளை நாம் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். அது என்னவென்றால் தற்போது நிறைய திட்டங்கள் அமல் படுத்தப்பட்டு வருகிறது. அதாவது ஆதார் என்னுடன் பான் எண்ணை இணைத்தல் மற்றும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைத்தல் என்று நிறைய அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தகைய அம்சங்களில் ஒன்றான ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இதுநாள் வரையிலும் இணைக்காமல் இருக்கும் நபர்களுக்கு ஒரு அறிவிப்பை மின்வாரியம் அறிவித்துள்ளது. ஆகையால் அது என்ன அறிவிப்பு அந்த அறிவிப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ ஆதார் அட்டை வைத்துருப்பவர்களுக்கு இலவச வாய்ப்பினை மத்திய அரசு அறிவித்துள்ளது..! இதற்கான கடைசி தேதி ஜூன் 15..

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க:

மின்சாரம் பயன்படுத்தும் அனைவரிடமும் மின்வாரியம் அட்டை உள்ளது. அதுமட்டும் இல்லாமல் அனைவரிடமும் ஆதார் அட்டையும் உள்ளது. இந்த இரண்டினையும் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதுமட்டும் இல்லாமல் ஒரு நபர் ஒன்று மேற்பட்ட இணைப்பினை வைத்து இருந்தாலும் கூட அவருக்கு 100 Unit இலவச மின்சாரத்தினை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பினை கேட்டு தமிழகத்தில் உள்ள பல மக்கள் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைத்து வந்தனர். இதில் இதுநாள் வரையிலும் இணைக்காத நபர்களும் உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

அதாவது தமிழகத்தில் மொத்தம் 2.67 கோடி மின் இணைப்புகள் உள்ளதாகும் அதில் 2,60,00,000 நபர்கள் மட்டும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகவும், இன்னும் 67,000 நபர்கள் இணைப்பினை இணைக்கவில்லை என்றும் மின்வாரியம் இப்போது கணக்கெடுத்துள்ளது.

இதன் காரணமாக இப்போது மின்வாரியம் அத்தகைய கணக்கெடுப்பின் படி இன்னும் இணைப்பினை இணைக்காத வீட்டிற்கு அந்தந்த தொகுதியில் உள்ள ஆய்வாளர்களை வீட்டிற்கு அனுப்பி ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கான பணியினை மேற்கொள்ள போவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்⇒ ரேஷன் கார்டு வைத்திருப்பர்வர்களுக்கு இனி இதுவும் இலவசம்…! இந்த குட் நியூஸ் எப்போ வந்துச்சு.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement