பட்ஜெட் தாக்கல் 2023
தமிழக அரசு இந்த வருடத்திற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்து உள்ளது. இத்தகைய பட்ஜெட் தாக்களின் போது நிறைய அம்சங்களை புதிதாக கொண்டு வந்துள்ளது. அதில் முக்கியமான ஒன்றாக மக்கள் அனைவரும் எதிர்பார்த்த மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகையானது இடம் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மற்ற இரண்டு முக்கிய அறிவிப்புகளையும் அறிவித்துள்ளது. ஆகையால் அத்தகைய அறிவிப்பு என்ன, எப்போது அந்த அறிவிப்பானது நடைமுறைக்கு கொண்டு வரப்படும் போன்ற அனைத்து தகவலையும் இன்றைய News பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ பான் மற்றும் ஆதார் கார்டு இணைப்பிற்கு மத்திய அரசு அறிவித்த குட் நியூஸ்.. என்ன தெரியுமா..
தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல்:
இந்த வருடத்திற்கான பட்ஜெட் தாக்கல் ஆனது மார்ச் மாதம் 21-ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது. அத்தகைய பட்ஜெட் தாக்கலின் போது முக்கிய அம்சங்களுடன் மூன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
அதில் முதலாவதாக பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட இந்த வருடம் காலை உணவு திட்டத்திற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த வருடம் 40 ஆயிரம் கோடி காலை உணவு திட்டடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 1547 பள்ளிகளில் இதை செயல்படுத்தப்பட்டதாகவும் விரைவில் மற்ற பள்ளிகளில் செயலுக்கு வரும் என்றும் அறிவிப்பு கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் படி தோராயமாக 18,00,000 மாணவர்கள் பயன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது.
பட்ஜெட்டில் 2-வதாக மாநகராட்சி பட்ஜெட்டாக சென்னையில் உள்ள பள்ளிகளில் 10 வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பயிலும் மாலை நேர வகுப்பிற்காக ஈவ்னிங் ஸ்னாக்ஸ் வழங்குவதற்காக சுமார் 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பெண்கள் அனைவரும் எதிர்பார்த்த மாதம் 1000 ரூபாய் ஊக்க தொகையானது செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் கார்டு பயனரகளுக்கு வழங்கப்படும் என்றும் தமிழக கூறியுள்ளது.
மேலும் வருமான வரி செலுத்தபவர்கள், சொந்தமாக வீடு வைத்து இருப்பவர்கள் மற்றும் அரசு பணியில் இருபவர்கள் என இவர்களுக்கு எல்லாம் மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகையானது வழங்கப்படாது என்றும் பட்ஜெட்டின் போது அறிவிப்பு வந்துள்ளது.
இதையும் படியுங்கள்⇒ பான், ஆதார் வைத்திருப்பவர்கள் இதை முக்கியம் தெரிந்துகொள்ளுங்கள்..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |