அரசு ஊழியர் ஓய்வூதியம்
பொதுவாக வேலை என்றால் அதை ஒரு அர்த்தத்தில் தான் நாம் கூறுவோம். ஆனால் அவற்றில் நிறைய வேறுபாடுகள் உள்ளது. தனியார் துறை வேலை மற்றும் அரசு ஊழியர் வேலை என்று இரண்டு வகையில் கூறலாம். இதில் அரசு ஊழியர்களுக்கு தான் நிறைய சலுகைகள் மற்றும் அதிகமான வருமானம் இதுநாள் வரையிலும் இருந்து வருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் அரசு ஊழியர்களுக்கு திடீரென ஒரு விதிமுறை கொண்டுவரப்பட்டது. அது என்னவென்றால் பழைய பென்ஷன் திட்டம் இனி இருக்காது என்றும் புதிய முறையின் படி தான் பென்ஷன் வழங்கும் என்றும் ஒரு அறிவிப்பு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் ஒரு அதிர்ச்சியில் இருந்தனர். ஆனால் இந்த அதிர்ச்சியில் இருந்து நீங்கி வருவதற்கு என்று தமிழக அரசு ஒரு குட் நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளது. அது என்ன குட் நியூஸ் என்று இன்றைய பதவில் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 உரிமை தொகை தமிழக அரசு வெளியிட்டுள்ளது தெரியுமா..?
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்:
அரசு ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான பென்ஷன் திட்டம் வழங்கி கொண்டிருந்த தமிழக அரசு திடீரென கடந்த 2004-ஆம் ஆண்டு இனி பழைய பென்ஷன் திட்டம் கிடையாது என்றும் புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் தான் ஓய்வு ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஆனால் இதனை அரசு ஊழியர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை மறுக்கும் வகையில் நிறைய போராட்டம் மற்றும் கடிதங்கள் மூலம் அவர் அவருடைய விருப்பத்தை தெரிவித்தன.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு 2003-ஆம் ஆண்டில் உள்ள பழைய பென்ஷன் திட்டம் வேண்டும் என்ற விடாமல் முயற்சி செய்த அரசு ஊழியர்களின் பட்டியல் முழுவதும் வேண்டும் என்று தமிழக அரசால் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீண்டும் பழைய பென்ஷன் திட்டதின் கீழ் அரசு ஊழியர்களுக்கு விரைவில் பென்ஷன் தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதுபோல குறைந்தது 30 வருடம் அரசு ஊழியராக பணியாற்றி அதன் பிறகு ஓய்வு பெரும் ஒவ்வொருவருக்கும் அவர் பெற்ற சம்பளத்தில் இருந்து 50% தொகை பென்ஷன் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வந்துள்ளது.
ஆனால் 01-04-2003 அன்றோ அல்லது அதற்கு அடுத்த நாளில் இருந்தோ மத்திய அரசால் அரசு பணியில் சேர்ந்த நபர்கள் அனைவருக்கும் அவருடைய சம்பளத்தில் இருந்து 10% தொகை பிடித்தம் செய்யப்பட்டு மீதம் உள்ள தொகை மட்டுமே சம்பளமாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இதையும் படியுங்கள்⇒ ஜூன் மூன்று முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |