அரசு பேருந்து ஊழியர்கள்
பொதுவாக அரசு வேலைகள் என்றால் அதில் அதிகம் உள்ளது. அதுபோல அவர்கள் உடைய அனுபவத்திற்கு ஏற்றவாறு தான் மாதாந்திர சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. அத்தகைய வரிசையில் அரசு பேருந்தில் தான் மக்கள் அனைவரும் அதிகமாக பயணம் செய்கின்றனர். மக்களை சரியான நேரத்திற்கு கவனமாக கொண்டு செல்லும் பொறுப்பு அந்த பேருந்தில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்தினர் வேலையாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இத்தகைய வேலையில் பேருந்தில் நிறைய இன்னல்களை அரசு ஊழியர்கள் சந்திக்கின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழக அரசு அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஒரு செய்தியினை அறிவித்துள்ளது. மேலும் அது என்ன அறிவிப்பு எப்போது அது நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்ற முழு விவரங்களையும் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ ஆதார் கார்டு வைத்து இருக்கும் அனைவருக்கும் இந்த குட் நியூஸ் இன்னும் தெரியாத..?என்னா சொல்றீங்க..
Tamil nadu Government Employees Retirement Age in Tamil:
அரசு ஊழியர் என்றால் அவர்கள் அனைவருக்கும் 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் அவர்கள் அனுபவம் மற்றும் பதவிக்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் சம்பளத்திற்கான விதிமுறைகள் மாறாமல் இருந்தாலும் கூட அவர்கள் ஓய்வு பெரும் வயதானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 2021-ஆம் ஆண்டு முதல் அரசு பேருந்து ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறு உயர்த்தப்பட்டு இருந்தாலும் கூட இதில் நிறைய சிக்கல் வந்துள்ளது.
அது என்னவென்றால் 50 வயதிற்கு மேல் வந்துவிட்டாலே இன்றைய காலத்தை பொறுத்தவரை உடம்பில் நிறைய நோய் பிரச்சனைகள் வந்து விடுகிறது. அதில் அடிப்படை பிரச்சனை என்றால் கண் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல் மற்றும் மூட்டு வலி போன்ற அனைத்தும் வந்துவிடுது.
உடலில் இதுபோன்ற பிரச்சனைகள் வருவதால் பேருந்து ஓட்டுவதற்கு மற்றும் பயணச் சீட்டு கொடுப்பதற்கும் சிரமமாக இருப்பதால் அடிக்கடி விடுப்பு எடுத்து விடுகின்றனர். அதுமட்டும் இல்லாமல் சில நேரத்தில் விபத்திற்கும் உள்ளாகிறது.
ஆகையால் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு அரசு பேருந்து ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதானது 60-ல் இருந்து 58 ஆக மீண்டும் குறைக்குமாறு தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த அறிவிப்பானது விரைவில் நடைமுறைக்கும் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்⇒ ரேஷன் கார்டு வைத்து இருக்கும் அனைவருக்கும் இந்த நியூஸ் தெரியுமா..? தெரிலான உடனே தெரிஞ்சுக்கோங்க..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |