தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக அரசின் புதிய அறிவிப்பு…! என்ன அறிவிப்பு தெரியுமா..?

Advertisement

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள்

நம்மில் பலரும் தினந்தோறும் நிறைய வகையான பயணங்களை மேற்கொள்கின்றோம். அப்படி நாம் செல்லும் பயணங்களில் பேருந்து பயணமும் ஒன்று. பேருந்து பயணம் என்றும் கூறும் போது அதில் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று அரசு பேருந்து மற்றொன்று தனியார் பேருந்து. இதில் பெரும்பாலும் பள்ளி மாணவர்கள், அலுவகதிற்கு செல்லும் ஆண் மற்றும் பெண் என பலரும் அரசு பேருந்தில் தான் பயணம் செய்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் அரசு பேருந்தில் பயணம் செய்வதற்கான கட்டணமும் குறைவாக தான் உள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் நடந்து முடிந்த முதலமைச்சர் தேர்தலில் வெற்றி பெற்ற தற்போதைய தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெண்கள் பயணம் செல்வதற்கு கட்டணமில்லா பயணம் என்று ஒரு அறிவிப்பினை அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இப்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்குமற்றொரு அறிவிப்பினையும் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். ஆகையால் அது என்ன அறிவிப்பு யாருக்காக அந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது போன்ற அனைத்தினையும் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ ஏப்ரல் 1 முதல் இதற்கு எல்லாம் கட்டணம் உயர்த்தப்படுமாம்..  உங்களுக்கு இன்னும் தெரியாதா..

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள்:

பொதுவாக பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு அத்தகைய பேருந்தில் உள்ள நடத்துனர் மற்றும் ஓட்டுநர் தான் முழு உரிமையுடன் கவனமாக அழைத்து செல்கின்றனர்.

இவ்வாறு இருக்கையில் அரசு பேருந்தில் பணியாற்றும் நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கான ஓய்வு பெரும் வயது குறித்து ஒரு அறிவிப்பு வந்தது. அதன் படி பெரும்பாலும் ஓய்வு பெற்று வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, VRS பெற்ற மற்றும் விபத்து காரணமாக இறந்து போன நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளார்.

அது என்னவென்றால் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் 2022 வரை அரசு போக்குவரத்துக்கு கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற, VRS பெற்ற மற்றும் விபத்து காரணமாக இறந்து போன நபர்கள் என 3,414 நபர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையாக 1,031. 32 கோடி ரூபாய் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதால் விரைவில் இந்த தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்⇒ பான், ஆதாரை இணைக்காதவர்களுக்கு அரசு அறிவித்த அதிரடியான மற்றொரு அறிவிப்பு என்ன தெரியுமா.. தெரிலைனா உடனே இதை தெரிஞ்சுக்கோங்க.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement