போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு..!

Advertisement

போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு – Tamil Nadu government has decided to increase the fares for transport services

நண்பர்களுக்கு வணக்கம்..! தமிழகத்தில் சொத்து வரி, மின்கட்டண உயர்வை தொடர்ந்து போக்குவரத்து சேவைகளுக்கான பல்வேறு கட்டணங்களை 10 மடங்கு வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என தகவல் வெளியாகி வருகின்றன. அதுவும் . இம்மாத இறுதியில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்த தகவல்களை நாம் இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

போக்குவரத்து துறையில் வாகனங்களை பதிவு செய்வதற்கு கட்டணம், பேன்சி நம்பர் வாங்குவதற்கு கட்டணம், டிரைவிங் லைசென்ஸ் மற்றும் எல்.எல்.ஆர். வாங்குவதற்கு கட்டணம் என பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வாகனங்கள் சரிவர பராமரிக்கப்பட்டு இயக்குவதற்கு தகுதியான வாகனம் என சான்றிதழ் அளிப்பதற்கு (எப்.சி.) குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி புதிய வாகனங்களை பதிவு செய்வது உள்ளிட்ட பல வகைகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கட்டணம் உயர்வு எவ்வளவு?

அதன்படி தற்காலிக வாகனப் பதிவு, தற்காலிகப் பதிவு நீட்டித்தலுக்கான கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.200 ஆகவும், வேறு மண்டலங்களில் வாகன தகுதிச்சான்று கட்டணமாக ரூ.500-ம், தகுதிச்சான்று நகல் பெற ரூ.250-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த தகுதிச்சான்று பெற கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகுதிச்சான்று பெறாத வாகனங்களை திரும்பப் பெறுவதற்கான சி.எஃப்.எக்ஸ். நோட்டீஸ் வழங்கப்படும்போது ரூ.30 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், தற்போது இக்கட்டணம் ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் அல்லது பதிவு அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருந்த ரூ.40 கட்டணம் ரூ.500 ஆகவும், வாகன ஆவணங்களுக்கான சான்றளிக்கப்பட்ட நகல் பெறுவதற்கு ரூ.75-க்கு பதில் ரூ.400 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாகனச் சோதனை மையங்களுக்கான அனுமதிக் கட்டணம் ரூ.1000-த்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், அனுமதியைப் புதுப்பிக்கும் கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. புதுப்பித்தலுக்கான விண்ணப்பம் தாமதமாக சமர்ப்பித்தால் ரூ.200-ம், போக்குவரத்து ஆணையரின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டுக்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.500 ஆகவும் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாகனச் சோதனை மையங்களுக்கான அனுமதிக் கட்டணம் ரூ.1000-த்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், அனுமதியைப் புதுப்பிக்கும் கட்டணம் ரூ.500-லிருந்து ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இம்மாதம் இறுதியில் அமலாகலாம் என போக்குவரத்துத் துறை தரப்பில் கூறப்படுகிறது.

காரணம் என்ன?

தமிழகத்தில் நிதி நெருக்கடியை அரசு எதிர்கொண்டுள்ளது. இதனை சமாளிக்கும் நோக்கில் தான் போக்குவரத்து துறை சேவைகளுக்கான கட்டணம் உயர்தத அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த சேவைகளுக்கான கட்டணம் 2006-2007 காலக்கட்டத்தில் திருத்தத்துடன் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு 15 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட உள்ளது. இருப்பினும் மோட்டார் வாகன வரி, எல்எல்ஆர், ஓட்டுனர் உரிமத்துக்கான கட்டணம் உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement