அரசு பள்ளிகளுக்கு அதிரடி அறிவிப்பு..! திடீர் அறிவிப்பிற்கான காரணம் என்ன..?

Advertisement

பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

பொதுவாக இன்றைய காலத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி என்பது இன்றியமையாத ஒன்றாக தான் கருதப்படுகிறது. அதனால் ஆண், பெண் என இருவரும் கல்வியினை கற்று வருகிறார்கள். அதிலும் பெரும்பாலும் ஆண்களை விட கல்வியில் பெண்கள் தான் முன்னுரிமை பெற்று வருகிறார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இப்போது அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை ஆனது அளிக்கப்பட்டு இருக்கிறது. அத்தகைய விடுமுறையிலும் சில நீட்டிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இப்போது வெயிலின் தாக்கமே இதற்கான முதன்மை காரணமாக அமைகிறது. இதுபோன்ற விஷயங்கள் அனைத்தும் நமக்கு தெரிந்தவற்றையாக இருந்தாலும் கூட இதில் தெரியாத ஒரு விஷயத்தை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதாவது பள்ளிக்கல்வித்துறை ஆனது அரசு பள்ளிகளுக்கு ஒரு முக்கிய அதிரடி அறிவிப்பினை அறிவித்துள்ளது. அது என்ன அறிவிப்பு என்றும், அதன் நோக்கம் என்னவென்றும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

பள்ளி திறக்கும் தேதி 2023 தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் கூட வெயிலின் தாக்கம் ஆனது அதிகமாக இருக்கிறது. இவ்வாறு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் மாணவர்கள் பள்ளிக்கு வந்து பாடங்களை கற்பது கடினமாக இருக்கும் என்றும், உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்ற காரணத்தால் ஜூன் மாதம் 1-ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் மாதம் 7-ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிருக்கிறார்.

Latest News👉👉 முக்கியமான வங்கிகள் என்று முதல் 3 இடத்தை பிடித்த வங்கிகள் எது தெரியுமா.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை:

ஒவ்வொருவரும் படிக்கும் பள்ளிகள் என்பது வேறுபட்டு காணப்படுகிறது. அதாவது சிலர் தனியார் பள்ளிகள், அரசு சார்ந்த பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் என இதுபோன்ற பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.

ஆனால் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேரும் அதே அளவிற்கு தனியார் பள்ளிகளிலும் சேர்ந்து வருகிறார்கள். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை என்பது குறைந்து கொண்டே இருக்கிறது.

இந்த வருடம் இதுமாதிரி இல்லாமல் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும் என்ற முக்கிய காரணத்தினால் ஒரு பேரணி ஒன்று நடத்த வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

அத்தகைய அறிவிப்பில் ஜூன் மாதம் 7-ஆம் தேதி பள்ளிகள் திறந்தவுடன் அடுத்த 2 வாரங்களுக்கு அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம் என்ற பெயரில் பேரணியினை அரசு பள்ளிகள் நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த விழிப்புணர்வு பேரணி மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை ஆனது அதிகரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News👉👉 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்யும் தெரியுமா 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement