விவசாயிகளுக்கு இப்படி ஒரு குட் நியூஸா..! விவசாயிகள் யாரும் இதை எதிர் பார்த்து இருக்க மாட்டீர்கள்..!

tamil nadu government schemes for farmers in tamil

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை

மனிதன் உணவு சாப்பிட்டு ஆரோக்கியமாக உயிர் வாழ்கிறான் என்றால் அதற்கு விவசாயிகளும் ஒரு முக்கிய காரணம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர்கள் விவசாயம் செய்து அரிசி கிடைக்கவில்லை என்றால் நாம் சாப்பிடவே முடியாது. அதுமட்டும் இல்லாமல் நாம் பார்க்கும் மற்ற வேலைகளை விட கடினமான வேலை என்றால் அது விவசாயம் தான். அதுபோல நாம் வேலை பார்த்தால் போதும் மாதம் மாதம் சம்பளத் தொகை நம்முடைய கைக்கு வந்து விடும். ஆனால் விவசாயத்தில் அப்படி கிடையாது. ஏனென்றால் ஒரு பயிர் நடவு செய்வது முதல் அறுவடை செய்வதற்குள் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். அதில் லாபம் மற்றும் நஷ்டம் எது வேண்டுமானாலும் நடக்காமல். அப்படி இருந்தாலும் கூட இன்றைய காலத்தில் நூற்றுக்கு 75% நபர்கள் விவசாயத்தை செய்து வருகிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழக விவசாயிகளுக்கு நிறைய சலுகைகளை மத்திய மற்றும் மாநில அரசு வழங்கியுள்ளது. அந்த வகையில் இப்போதும் மத்திய அரசு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் அதில் யாரெல்லாம் பயன் அடையலாம் என்று விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ ஆதார் கார்டு வைத்து இருக்கும் அனைவருக்கும் இந்த குட் நியூஸ் இன்னும் தெரியாத..?என்னா சொல்றீங்க..!

குறைந்தபட்ச ஆதார விலை என்றால் என்ன..?

 விவசாயிகள் விளைவித்த பொருளை நேரடியாக வாங்கும் போது மத்திய அரசு அறிவித்துள்ள விலையின் அடிப்படியில் வாங்கும் முறையே குறைந்தபட்ச ஆதார விலை எனப்படும்.  

Tamil nadu Government Schemes for Farmers in Tamil:

விவசாயம் என்பது ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றவாறு பயிர் செய்யும் முறை ஆகும். ஏனென்றால் இதுமாதிரி காலநிலைக்கு ஏற்றவாறு பயிர் செய்யும் போது தான் நல்ல மகசூல் கிடைக்கும் மற்றும் பயிர்கள் அனைத்தும் செழிப்பாகவும் இருக்கும்.

அதன் படி பார்த்தால் இப்போது தான் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நெல் அறுவை முடிந்து இருக்கிறது. என்ன தான் நாம் கஷ்டப்பட்டு பயிரை வளர்த்து அறுவடை செய்தாலும் கூட அதனை விற்பனை செய்வதில் பெரும் பிரச்சனை உண்டாகும்.

விவசாயிகள் அறுவடை செய்த பொருளை மற்றொருவர் வாங்கும் போது அவரே ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையினை வைத்து அதன் படி விற்பனை கேட்பார்கள். இந்த பிரச்சனை என்பது விவசாயிகளுக்கு ஒவ்வொரு முறையும் அறுவடை செய்து விற்பனை செய்யும் போது வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. அது என்னவென்றால் இப்போது நெல் அறுவடை முடிந்து அடுத்து பாசிப்பயிர் மற்றும் உளுந்து பயிர் செய்யும் முறை தொடங்கிவிடும். ஆகையால் பாசிப்பயிறு கிலோ 77.55 ரூபாய் என்றும் உளுந்து கிலோ 66 ரூபாய் என்றும் குறைந்தபட்ச ஆதார விலையினை விவசாயிகளுக்கு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளபடுவதாகும் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை நடப்பு ராபிப் பருவத்தில் உளுந்து 60,023 டன்னும் மற்றும் பச்சைபயிறு 12,605 டன்னும் கொள்முதல் செய்வதற்கான அனுமதியினை ஒன்றிய அரசிடம் பெற்றுள்ளதால் அதவும் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தினை பெரும் முறை:

இத்தகைய திட்டத்தின் கீழ் நீங்கள் பயன்பெற வேண்டும் என்றால் ஆதார் கார்டு, Bank Passbook நகல், நிலச்சிட்டா ஆகியவற்றை உங்களுடைய ஊரில் உள்ள ஒழுங்குமுறைக்கூடத்திற்கு சமர்ப்பித்து தங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்⇒ ரேஷன் கார்டு வைத்து இருக்கும் அனைவருக்கும் இந்த நியூஸ் தெரியுமா..? தெரிலான உடனே தெரிஞ்சுக்கோங்க..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil