தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி கட்டணத்தில் சலுகை..!

Advertisement

தேசிய கல்வி நிறுவனத்தில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை

Government Free Education Scheme:- நமது தமிழக அரசு தற்பொழுது பள்ளி மாணவர்களுக்கு பலவகையான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணமாக உள்ளது. அந்த வகையில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி கட்டணத்தில் சலுகை அறிவித்துள்ளது, அது குறித்த அரசாணையும் வெளியிட்டுள்ளது. அது குறித்த தகவலை நாம் இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி கட்டணத்தில் சலுகை!! அரசாணை வெளியீடு – Government Free Education Scheme:-

அரசு பள்ளிகளில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு  வரை முடித்து, ஐஐடி, இந்திய அறிவியல் கழகம், எய்ம்ஸ் போன்ற புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்தால் அவர்களின் இளநிலை பட்டப் படிப்புக்கான முழு செலவை அரசே ஏற்கும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு  வரை முடிக்கும் மாணவர்களுக்கு, தமிழக உயர்கல்வி நிறுவனங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடும், கட்டண சலுகையும் வழங்கப் படுகிறது. இதுபோல, ஐ.ஐ.டி., – ஐ.ஐ.எம்., – ஐ.ஐ.எஸ்சி., – எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கும், தமிழக அரசே கட்டணத்தை செலுத்தும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான அரசாணை வெளியானது. உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவு வருமாறு: தகுதியான மாணவர்கள், தங்களுக்கான அனைத்து வகை சான்றிதழ்கள், சேர்க்கை ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். அங்கு விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே ஒப்புதல் அளிக்கப்படும்.

பின், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்துக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை வழியே கட்டணம் செலுத்தப்படும். இந்த சலுகைக்கு ஜாதி பாகுபாடு மற்றும் வருமான உச்சவரம்பு கணக்கிடப்படாது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 செப்டம்பர் 15 முதல் தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி அரசு அறிவிப்பு..!

இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News
Advertisement