வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அரசு அறிவித்த 1000 தொகை செப்- 15 முதல் வழங்கப்படும்..! யாருக்கு உண்டு யாருக்கு இல்லை

Updated On: July 8, 2023 7:08 AM
Follow Us:
Entitlement Scheme for Women in tamil
---Advertisement---
Advertisement

Entitlement Scheme for Women

வாசகர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி ஒன்றை தெரியப்படுத்த போகிறேன். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறவும். சட்டப் பேரவை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்தது. இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று மக்கள் அனைவருமே எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தமிழக அரசு உரிமை தொகை வழங்கும் தேதியை வெளியிட்டுள்ளது. அந்த தொகை எப்பொழுது வழங்கப்படும், அந்த தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

மாதந்தோறும் மகளிருக்கு உதவி தொகை 3000 -மாக உயர்த்தபடுகிறது 

அரசு அறிவித்த மகளிர் உதவித்தொகை எப்போது வழங்கப்படும்..? 

மக்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த மகளிர் உதவித்தொகை செப்டம்பர் 15 ஆம் தேதி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதாவது அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைப்பார் என்று அறிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த மகளிர் உதவித்தொகை திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்⇒ ரேஷன் கார்டு வைத்திருப்பர்வர்களுக்கு இனி இதுவும் இலவசம்  இந்த குட் நியூஸ் எப்போ வந்துச்சு

மகளிர் உரிமைத் தொகை யாருக்கு கிடைக்கும்: 

  1. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், PHH-AYY, PHH, NPHH ரேசன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
  2. உயர்கல்வி பயிலும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் 1,000 ரூபாய் வாங்கினாலும், அவர்களின் தாயார்களுக்கும் இந்த மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
  3. மேலும், முதியோர் உதவித் தொகை பெற்றாலும், தகுதிகளின் அடிப்படையில் அவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

உரிமைத் தொகை யாருக்கு கிடைக்காது..?

  • வருமானவரி செலுத்துவோர், சொந்த வீடு வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்களுக்கு இந்த உரிமைத் தொகை கிடைக்காது என்று கூறப்படுகிறது.
ஆதார் அட்டை வைத்துருப்பவர்களுக்கு இலவச வாய்ப்பினை மத்திய அரசு அறிவித்துள்ளது இதற்கான கடைசி தேதி ஜூன் 15

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now