2025-2026 Budget எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்று தெரியுமா?

Advertisement

Tamilnadu Budget 2025 -2026 Updates In Tamil

பொதுவாகவே நாம் வீட்டில் மேற்கொள்ளும் செலவுகளுக்கே நாம் திட்டமிட்டு பட்ஜெட் போடு தான் செலவு செய்கிறோம். அதேபோல தான் அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு துறைக்கு என்று ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்கிறார்கள். அந்த துறைக்கான தொகையை வைத்து தான் தான் அந்த ஆண்டு முழுதும் ஏற்படும் செலவுகளை செய்கிறார்கள். மேலும் புதிதாக நிறைய சிறப்பு திட்டங்களையும் கொண்டுவருகிறார்கள்.

பட்ஜெட் தாக்கல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு துறைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டிழும் ஒவ்வொரு துறைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட துறை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இன்றைய பதிவில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தமிழ்நாடு பட்ஜெட் ஒவ்வொரு துறைக்கான நிதி ஒதுக்கீடு:

மின்துறைக்கான நிதிஒதுக்கீடு:

மின்துறை என்பது ஒரு முக்கியமான அத்தியாவசிய துறை என்பதால், மின்துறைக்கு ரூ.27,168 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.21,168 கோடி நிதி ஒதுக்கீடு செயப்பட்டது.

ராமேஸ்வரத்தில் புதிய விமான விமான நிலையம் அறிவிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரிவுபடுத்தப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறைவித்து இருக்கிறார்.

பறவைகள் சரணாலயத்திற்கு நிதி ஒதுக்கீடு:

தனுஷ்கோடியில் பூநாரை பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என அமைச்சர் அறிவித்து இருக்கிறார்.மேலும் ரூ. 1 கோடியில் வேட்டை பறவைகள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது:

ராமநாதபுரம், மதுரை, கரூர், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னைக்கு அறைக்குள் உள்ள கோவள்த்தில் ரூ.360 கோடி மதிப்பில் புதிய நீர் தேக்கம் ஏற்படுத்தப்படும் என அறிவுறுத்தியிருக்கிறார். இதன் மூலம் 17,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

10 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்:

குன்னூர், நத்தம் ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், பெரம்பலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் கல்வியாண்டு மூலம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 லட்சம் சிறு குறு நிறுவனங்களுக்கு கடனுதவி:

2025-2026 நிதி ஆண்டில் வங்கிகள் மூலம் 101 லட்சம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் கோடி வங்கிக்கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரிவில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ விரிவாக்கம் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு:

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து இருக்கிறார். விமான நிலையம் – கிளாம்பாக்கம் : ரூ.9,335 கோடி, கோயம்பேடு – பட்டாபிராம் : ரூ.9,744 கோடி, பூந்தமல்லி – ஸ்ரீபெரும்புதூர் : ரூ.8,779 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

மீன்பிடி தடைகால உதவித்தொகை உயர்வு:

இலங்கை சிறையில் உள்ள மீனவர் குடும்பத்தினருக்கு நாள்தோறும் வழங்கப்பட உதவித்தொகை ரூ.500 அக்கா உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.8000 ஆக உயர்த்தப்படுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000:

பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயதுவரை மாதம் தோறும் ரூ.2000 வழங்கப்படும் என அறிவிக்க்ப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் கைவினை திட்டத்திற்கு மானிய நிதியாக ரூ.74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வழிபாடு தளங்களை பராமரிக்க நிதி ஒதுக்கீடு:

பழமை வாய்ந்த வழிபாடு தளங்கலான மசூதிகள் மற்றும் தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதியும், 1000 ஆண்டுகள் பழமையான கோயில்களில் ரூ.125 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி:

தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி அல்லது மடிக்கணினி அவரவர் விருப்பத்திற்கேற்ப வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்து இருக்கிறார்.

மாநில வரி வருவாய் 14.6% உயரும்:

இந்த ஆண்டு மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 14.60% உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.

இதுபோன்று பல்வேறு வகையான செய்திகளை தெரிந்து இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்👉👉 News
Advertisement