இனி மின்சாரம் பயன்படுத்துவதை பொறுத்து கட்டணம் இல்லை..! தமிழ்நாடு மின்சார வாரியம் திடீர் கோரிக்கை..!

Advertisement

  தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திகள் – Tamilnadu Electricity Board News

நண்பர்களே மாதம் மாதம் ஒவ்வொரு வகையான பில்களை கட்டுவோம். அதேபோல் மாதம் மின்சார கட்டணம் கட்டுவது வழக்கம். அப்படி நாம் கட்டுவது சில நேரத்தில் அதிகமாக இருக்கலாம். சில நேரத்தில் குறைவாக இருக்கலாம். அது நாம் பயன்படுத்தும் மின்சாரத்தை பொறுத்து உள்ளது. ஆனால் இப்போது ஏசி, வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்படுத்தும் வீடுகளில், சேவைக்கட்டணம் விதிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை பற்றிய செய்திகளை படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திகள்:

இனி நாம் பயன்படுத்தும் மின்சாரத்தை பொறுத்து கட்டணம் கிடையாது. அதாவது அதிக மின்சாரம் பயன்படுத்தினால் அதற்கு ஏற்ற அளவு கட்டணம் கிடையாது. இதனை தொடர்ந்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ள செய்திகள் என்ன என்பதை மேலும் பார்க்கலாம்.

அக்னீ வெயில் என்பதால் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கமானது 100 டிகிரியை தாண்டியுள்ளது. எனவே மின்சார பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. ஆகவே மின்சார வழங்கல் விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் சமீபத்தில் ஒரு கோரிக்கை வைத்துள்ளது.

ஆகவே ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்படும் அளவை விட அதிக அளவுகள் பயன்படுத்தினால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். அதாவது ஒரு வீட்டிற்கு 10 கிலோவாட் மின்சாரம் வழங்கப்படும். அந்த வழங்கப்பட்ட அளவுகளை விட 11 கிலோ வாட் மின்சாரம் பயன்படுத்தினால் அவர்கள் எந்த எந்தெந்த மாதம் பயன்படுத்துகிறார்களோ அத்தனை முறையும் அபராதம் செலுத்தவேண்டும்.

அதாவது இரு மாதங்கள் தொடர்ந்து கூடுதல் மின்சாரம் பயன்படுத்தினால் அவர்களுக்கு 1 மாதம் கூடுதல் அபராதம் செலுத்தபடவேண்டும். அதேபோல் வருடத்தில் 3 முறை கூடுதல் கட்டணம் செலுத்தினால் அவர்கள் கூடுதல் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் பரிந்துரை செய்துவருகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அரசு உத்தரவு: வாரம் தோறும் பணிபுரியும் பெண்களுக்கு 2 மணி நேரம் விடுமுறை

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement