அரசு பேருந்தில் செல்பவரா நீங்கள்..! அப்படினா இந்த நியூஸை நீங்கள் தான் முதலில் தெரிஞ்சுக்கனும்..!

Advertisement

பேருந்து பயணிகள்

பேருந்து என்பது நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு மிகவும் உதவியாக உள்ள ஒன்றாக உள்ளது. அத்தகைய பேருந்துகளிலும் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று அரசு பேருந்து மற்றொன்று தனியார் பேருந்து. என்ன தான் இரண்டு வகையான பேருந்துகள் இருந்தாலும் கூட அதிகமான மக்கள் அரசு பேருந்தினை தான் விரும்புகின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழக அரசு பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்து அதில் பெண்களை பயன் அடைய செய்தது. இதனை தொடர்ந்து இப்போது அரசு பேருந்தில் செல்லும் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அது என்ன செய்தி என்பது பற்றிய முழுவிவரங்களையும் பதிவை தொடர்ந்து படித்து பார்க்கலாம் வாருங்கள்.

 இதையும் படியுங்கள்⇒ ஆதார் கார்டு வைத்து இருக்கும் அனைவருக்கும் இந்த குட் நியூஸ் இன்னும் தெரியாத..?என்னா சொல்றீங்க 

தமிழ்நாடு அரசு பேருந்து புகார் எண்:

அரசு பேருந்தில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என்று நிறைய திட்டங்கள் கொண்டு வந்துள்ளது.

அதுமட்டும் இல்லாமல் நிறைய கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி உள்ளது. இதனாலும்  நிறைய மக்கள் பயன் அடைந்து கொண்டு தான் உள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் சுமார் 20,000 மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருவதாகவும் அதில் 7,321 சாதாரண பேருந்துகள் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு நாளைக்கு சுமார் 1.5 கோடி நபர்கள் அரசு பேருந்தில் பயணித்து வருவதாகவும் அதில் பெண்கள் மட்டுமே 39 லட்சம் நபர்கள் அரசு பேருந்தில் பயணிப்பதாகவும் ஒரு தோராயமான கணக்கெடுப்பின் படி போக்குவரத்துக்கு கழகத்தால் கூறப்படுகிறது.

இவற்றை எல்லாம் இருந்தாலும் கூட அரசு பேருந்துகள் மீது ஏதேனும் போக்குவரத்துக்கு கழகத்திற்கு புகார் அளிக்க வேண்டும் என்றால் அதற்கான எந்த ஒரு வசதியும் இல்லை என்பது பொதுமக்களுடைய ஒரு  இருந்தது.

ஏனென்றால் மருத்துவ வசதிக்கு இலவச எண், தீயணைப்பு துறைக்கு அழைப்பு எண் மற்றும் காவல் துறைக்கு என பல துறைகளுக்கு இலவச அழைப்பு உள்ளது. ஆகையால் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது.

அது என்னவென்றால் அரசு பேருந்துகள் பற்றிய புகாரை அளிப்பதற்கு 1800 599 1500 என்ற இலவச தொலைபேசி எண் மற்றும் arasubus.tn.gov.in என்ற இணையதளத்தையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசு பேருந்து பயணிகள் அவர்களுடைய புகாரினை அரசு போக்குவரத்துக்கு கழகத்திற்கு அளிக்கலாம்.

இதையும் படியுங்கள்⇒ இனிமேல் சென்னை மக்கள் யாரும் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டாம்..! குட் நியூஸ் வந்தாச்சு

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement