கொளுந்துவிட்டு எரியும் வெயிலில் இருந்து தப்பிக்க அரசு கூறும் அட்வைஸ்..!

Advertisement

Summer -க்கு அரசு கூறும் அட்வைஸ்

என்ன நண்பர்களே இந்த வெயிலில் எல்லாரும் ரொம்ப Cool ஆக இருக்கிறீர்கள் என்று நினைக்கின்றோம். கோபம் கொள்ளாதீர்கள் நண்பர்களே, விளையாட்டுக்கு கூறினேன். இந்த வெயிலில் வெளியில் தலைகாட்டவே பயமாக இருக்கிறது. அந்தளவிற்கு வெயில் நம்மை வாட்டி வதைக்கிறது அல்லவா..! அதுபோல இந்த வெயில் காலத்தில் எது விற்பனை ஆகிறதோ இல்லையோ Fan, Ac எல்லாம் தாறுமாறாக விற்பனை ஆகும். சரி நாம் இந்த வெயிலில் இருந்து தப்பிக்க மத்திய அரசு நமக்கு சில டிப்ஸ் மற்றும் அட்வைஸ் சொல்கிறது. அது என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வெயிலில் இருந்து தப்பிக்க அரசு கூறும் அட்வைஸ் என்ன..?

tamil nadu government give summer tips and advice

இந்த கோடை வெயிலை தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறை அரசு செயலாளர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

இந்த ஆய்வுக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழில் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதேப்போல பள்ளிக்கல்வித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் போன்ற மேலதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து  தலைமைச் செயலாளர் விரிவான அறிவுரைகளை வழங்கினார். மேலும் இந்த அறிவுரைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை தொகுத்து அனைத்து துறைகளுக்கும் வழங்கவேண்டும் என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து இவை சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

கூகுள் Gmail அக்கவுண்டை Delete செய்ய போகிறதா.. அப்போ யாருடைய அக்கவுண்ட் எல்லாம் Delete ஆகும் தெரியுமா

இந்த கோடை வெயிலை தடுக்க அரசு கூறும் அட்வைஸ்: 

  1. உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
  2. வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்லவேண்டும்.
  3. அதுபோல எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும்.
  4. இந்த வெயில் காலத்தில் நீர்சத்து உள்ள பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ண வேண்டும்.
  5. நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்க வேண்டும்.
  6. மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
  7. வெளியில் செல்லும்போது காலணிகளை அணியவேண்டும்.
  8. மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும்.
  9. உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
  10. சிறிய குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மதிய வேளையில் வெளியில்  செல்வதை தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற செயல்களை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய்த்துறை ஆணையர் பிரபாகர் கூறியுள்ளார்.

Jio-வின் செம ஆபர்… அதுவும் 399 ரூபாயில் Family Plan மிஸ் பண்ணிடாதீங்க

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement